வலைபாயுதே | Social Media Hot Shares - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/05/2019)

வலைபாயுதே

facebook.com/RS Prabu

தானியங்கித் தொழில்நுட்பங்கள் வந்து விட்டால் கணிசமாக மனிதர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்துவிடும் என்று சொல்லப்படும்போதெல்லாம் நெடுஞ் சாலை சுங்கச்சாவடிகளில் உள்ள Fast Tag சந்து நினைவுக்கு வந்து ஆட்டித் தொலைக் கிறது. காசு வாங்கிப்போட என்னவோ ஆள் தேவையில்லைதான். ஆனால் திறந்திருக் கிறதே என்று காசு கொடுக்காமல் ஓடுபவர்களைத் தடுக்க காவலாளிகள் தேவைப்படுகிறார்கள்.

facebook.com/iMuthuram

பீரோவுக்குப் பக்கத்துல ஃப்ரிட்ஜைத் தூக்கி வச்சிட்டு உசுர வாங்குறாய்ங்க. ஃப்ரிட்ஜ்ஜைத் தொறந்து ஜட்டிய தேடிட்டு இருக்கேன்!