சிறந்த புதுமுக இயக்குநர் - ஆர்.ரவிக்குமார் - `இன்று நேற்று நாளை’

மிழில் ஒரு சயின்ஸ்ஃபிக்‌ஷன், அதுவும் லோ பட்ஜெட்டில்... `விளையாடாதீங்க பாஸ். சான்ஸே இல்ல’ எனக் கைகூப்பி மறுத்த கோடம்பாக்கம் இயக்குநர்களுக்கு மத்தியில் விளையாடி ஜெயித்த இளம் இயக்குநர் ரவிக்குமார் ரொம்பவே ஸ்பெஷல். ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு ஷாட்டிலும் அத்தனை நேர்த்தி. குறைந்த செலவில், கிடைத் தவற்றைக்கொண்டு முழுமையான திரை அனுப வத்தைக் கொடுத்தது பாராட்டுக்கு உரியது. `கால இயந்திரத்தில் ஒரு ஜாலி ரைடு’ என்றதுமே பேஜாரான தமிழனை செம ஜாலியாகச் சிரிக்கவைத்து சுளுக்கு எடுத்தார் இந்த திருப்பூர் இளைஞர். தமிழில் இல்லாத சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரை, தைரியமாகக் கையாண்ட ரவிக்குமாருக்குக் கட்டாயம் கொடுக் கலாம் ஓர் உற்சாக ஹைஃபை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்