சிறந்த குழந்தை நட்சத்திரம்

சிறந்த குழந்தை நட்சத்திரம்

வி.ரமேஷ், ஜெ.விக்னேஷ்

`காக்கா முட்டை’


சிறகடித்துப் பறந்து, தீராத சேட்டைகள் செய்த இந்தச் சுள்ளான்கள், கண்டோர் மனங்களைக் களவாண்டார்கள். சின்ன காக்கா முட்டையாகவும் பெரிய காக்கா முட்டையாகவுமே மனதில் பதிந்துவிட்ட வடசென்னையின் வாண்டுகள் ரமேஷ், விக்னேஷ். இந்த அழுக்குப் பையன்களின் அழகில் ஆல் இந்தியாவே மயங்கியது. முதல் படம் என்ற பதற்றமோ, கேமரா அச்சமோ இல்லாமல், இயல்பான நடிப்பில் அசத்தினார்கள் இருவரும். சின்ன காக்கா முட்டை வெளிப்படுத்திய அப்பாவித்தனமும் அந்தக் குறும்புப் பார்வையும் அத்தனை அழகு. பெரிய காக்கா முட்டையின் கோபத்தில் தெறித்தது அவ்வளவு நேர்மை. ஒட்டுமொத்தப் படத்தையும் மாஸ் ஹீரோபோல நெஞ்சில் சுமந்த இந்தக் குட்டிப்பையன்கள்  தமிழ் சினிமாவைத் தெறிக்கவிட்ட தேவதூதர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick