சிறந்த இசையமைப்பாளர் | Best music director of kollywood 2015 - Ananda Vikatan Awards | ஆனந்த விகடன் விருதுகள்

சிறந்த இசையமைப்பாளர்

சிறந்த இசையமைப்பாளர்

ஏ.ஆர்.ரஹ்மான்

 `ஓ காதல் கண்மணி’


காதலால் நிரம்பிய ஒரு படத்துக்கு வானவில்லாக வண்ணம் கொடுத்தது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை.

`ஓ காதல் கண்மணி’யின் ஒவ்வொரு நொடியிலும் இசை இறகாக வருடியது. `மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை’ என உள்ளம் உருகவைத்தது. மென்டல் மனங்கள், `சினாமிகா சினாமிகா’ என பித்தாகத் திரிந்தன.  ஒவ்வொரு பாடலும் சொர்க்கவாசலுக்கான சாவியாக ஒலித்தது. `சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே’ கஜலில் அவர் போட்டது, காதல் மனங்களின் ரகசிய ரங்கோலி. நவீன இளைஞர்களின் பல்ஸ் பிடித்து, வெரைட்டியும் ட்ரெண்டியும் கலந்து அடித்தது வைரல் ஹிட். ‘மன மன மென்டல் மனதில்’ என்ற சிங்கிள் ட்ராக் வெளியானபோது பற்றிக்கொண்ட `ஓ காதல் கண்மணி’ ஃபீவர், பல மாதங்கள் தொடர்ந்தது. இசையும் பாடல்களும் கதையை அழுத்தமாகச் சொல்லி படத்தை ஒரு மியூஸிக்கல் ஜர்னியாக மாற்றியது. 2015... இசைப்புயலின் ஆண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick