சிறந்த ஒளிப்பதிவு | Best cinematography of Kollywood 2015 - Ananda Vikatan Awards | ஆனந்த விகடன் விருதுகள்
சிறந்த கதை - சிறந்த திரைக்கதை

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2016)

சிறந்த ஒளிப்பதிவு

சிறந்த ஒளிப்பதிவு

பி.சி.ஸ்ரீராம் - `ஐ’

உலகமே டிஜிட்டலாக மாற, `இந்தக் கதைக்கு ஃபிலிம்தான் தேவை’ என தீர்மானமாகச் சொன்னார் பி.சி.ஸ்ரீராம். சீனாவின் இயற்கை அழகு, வடசென்னையின் அழுக்குச் சந்துகள், அழகி ஏமி, அகோர விக்ரம் என ஏகப்பட்ட சவால்கள். அனைத்தையும் சுவாரஸ்யமாகப் படம்பிடித்தது பி.சி-யின் கேமரா. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட், மூன்று வருட உழைப்பு என எல்லாமே ஃப்ரேம் பை ஃப்ரேம் கவிதை. ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு கான்செப்ட். அதுவே ஒரு படத்துக்கு சமம் என கொண்டாடியது தமிழ் சினிமா. சின்ன கேன்வாஸில் சிகரம் தொட்டவருக்கு `ஐ’ எவரெஸ்ட் உயரம்; அவர் மகுடத்தில் இன்னொரு வைரம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க