சிறந்த பாடலாசிரியர்

 சிறந்த பாடலாசிரியர்

வைரமுத்து

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை - ஓ காதல் கண்மணி’


இளசுகளின் கதை என இயக்குநர் சொன்னதும் தன் பேனாவுக்கு `ஸ்லிம் ஃபிட்’ ஜீன்ஸை மாட்டிவிட்டார் வைரமுத்து. `ஓ காதல் கண்மணி’யின் ஒவ்வோர் அசைவையும் டிஜிட்டல் நகல் எடுத்து வைரல் டிரெண்ட் ஆக்கினார். `நானே வருகிறேன்... கேளாமல் தருகிறேன்’ என முதல் வரியிலேயே அதிரவைத்துக் கதை சொன்னது, `மலர்கள் கேட்டேன்... வனமே தந்தனை’ என இசை வசமானது,  `சரிந்து விழும் அழகென்று தெரியும் கண்ணா... என் சந்தோஷக் கலைகளை நான் நிறுத்த மாட்டேன்’ என வாழ்வின் யதார்த்தம் வழியே காதல் பகிர்ந்தது... என `ஓ காதல் கண்மணி’க்கு வைரமுத்து இளமை கிரீடம் அணிவித்தார். இது கவிஞருக்கான கிரீடம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்