சிறந்த பின்னணிப் பாடகர் - பாடகி

சிறந்த பின்னணிப் பாடகர்

ஏ.ஆர்.அமீன்

 மௌலா வா சல்லிம்... - `ஓ காதல் கண்மணி’


இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன். இந்தக் குட்டிப்புயல் ‘மௌலா வா சல்லிம்...’ என தன் பிஞ்சுக் குரலால் நம் உடலில் பாய்ச்சியது, உள்ளம் உறையவைக்கும் ஆன்மிக மின்சாரம். பாரம்பர்ய இஸ்லாமிய அரபிக் பாடல் மூலம் `ஓ காதல் கண்மணி’யில் தன் இசை இன்னிங்ஸைத் தொடங்கினார் ஏ.ஆர்.அமீன். தந்தையைப் போலவே தனயனின் இசைப் பயணத்தைத் தொடங்கிவைத்தவர் மணிரத்னம். முதல் பாடலிலேயே தன் தேன் மிளகுக் குரலால் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஈர்த்து இழுத்தார். பொருள் புரியாவிட்டாலும், பல லட்சம் மனங்களைக் கசிந்துருகவைக்க முடியும் என்பதை நிகழ்த்திக்காட்டியது ஏ.ஆர்.அமீனின் வசியக் குரல். ஒவ்வொரு முறை கேட்கும்போதும், ஆன்மாவின் ஆழத்தை வருடும் ‘மௌலா வா சல்லிம்...’ தமிழ் இசையின் ஆன்மிகத் தாலாட்டு.

Best playback singer (male)

A.R. Ameen

 ‘Maula Wa sallim,’ - ‘O Kadhal Kanmani’


A.R. Ameen is the son of A.R. Rahman. When the child rendered the verses of ‘Maula Wa sallim,’ it was almost as if spiritual currents were coursing through our veins. A.R. Ameen makes his musical debut with this traditional Arabic song. Like his father, Ameen too begins his journey with a Manirathnam film. He drew the attention of the entire country with his pepper and honey voice. His attractive voice showed that one could captivate the listener even if they do not understand the meaning of the lyrics. Whenever you listen to the song, you can feel the tug in your soul. ‘Maula Wa sallim’ is a spiritual lullaby.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick