சிறந்த படம் - `காக்கா முட்டை’

ச்சா போய்விட்டு அதை நாசூக்காக மறைக்கிற சின்ன காக்கா முட்டையின் பிரமாதமான சேட்டையோடு தொடங்கும்போதே, `இது வேற படம் பாஸ்’ என நிமிர்ந்து உட்காரவைத்த `காக்கா முட்டை’, தமிழ் சினிமாவின் தங்க முட்டை. அழகான, அற்புதமான, அர்த்தமுள்ள படைப்பு. ஒரு மாநகரம், இரண்டு அழுக்குப் பையன்கள், 300 ரூபாய் பீட்சா... என சின்னப் படம்தான். ஆனால், படம் பார்த்த ஒவ்வொருவருக்குள்ளும் உண்டாக்கிய மனமலர்ச்சி, ரொம்பப் பெரிது. ஒரு சிறிய படம், எளிய கலைஞர்களுடன், தமிழ் சினிமா இலக்கணத்தில் அடங்கும் எதுவுமே இல்லாமலும்கூட, அத்தனை நிறைவான ஒரு திரைப்படமாக மலர்ந்திருந்தது. அன்றாடம் நாம் கடக்கிற ஆயிரமாயிரம் சிறுவர்களின் இயல்பான ஆசைகளை, புன்னகையோடு ஆவணப்படுத்திய `காக்கா முட்டை’ தமிழ் சினிமாவுக்கான ராஜபாட்டை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick