சிறந்த படத்தொகுப்பு | Best editor of Kollywood - Ananda Vikatan Awards | ஆனந்த விகடன் விருதுகள்

சிறந்த படத்தொகுப்பு

சிறந்த படத்தொகுப்பு

கிஷோர் - `காக்கா முட்டை’

கொஞ்சம் பிசகினாலும் உடைந்து விடக்கூடிய இத்தனை மெல்லிய   காட்சிகளையும், துல்லியமாக வெட்டி ஒட்டி ஓட்டியது கிஷோரின் திறமை. சேரிகளின் இண்டு இடுக்கிலும், சந்துபொந்துகளிலும் திரிந்த கேமராவை, இழுத்துக் கோத்து மாலை ஆக்கிய எக்ஸலென்ட் எடிட்டிங். விறுவிறு வேகக் காட்சிகள் கிடையாது. தாவிப் பறந்து, தவழ்ந்து மறையும் கோணங்கள் கிடையாது. ஆக்‌ஷன் அதிரடியோ, ரொமான்டிக் தெறிப்புகளோ எதுவுமே இல்லாமல் ஏழை மக்களின் எளிமையான வாழ்க்கைச் சித்திரத்தை அதன் கவித்துவத்துடன் பரிமாறிய படையலில் அத்தனை ருசி. உன்னதமான சினிமாவில் எங்குமே பிசிறடிக்காத அந்த எடிட்டிங்கில் இருந்தது அத்தனை ஜீவன். மிஸ் யூ கிஷோர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick