சிறந்த கலை இயக்கம் | Best Art Direction of kollywood 2015 - Ananda Vikatan Awards | ஆனந்த விகடன் விருதுகள்
சிறந்த கதை - சிறந்த திரைக்கதை

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2016)

சிறந்த கலை இயக்கம்

சிறந்த கலை இயக்கம்

சாபு சிரில் - `பாகுபலி’

வரலாற்றுப் படங்கள், கலை இயக்குநர்களுக்கான ஃப்ரீ ஹிட். வாய்ப்புகள் அதிகம்; அதேசமயம் ஸ்கோர் செய்தாகவேண்டிய நெருக்கடி. `பாகுபலி’யில் சாபு சிரில் அடித்ததோ ஸ்டேடியம் தாண்டிய சிக்ஸர். கையில் தாங்கும் வாளில் இருந்து அரண்மனையின் ஒரு மூலையில் இருக்கும் மேஜை வரை பார்த்துப் பார்த்து இழைத்ததில் இருந்த நேர்த்தி உலகத் தரம். பாதி உண்மை, பாதி கிராஃபிக்ஸ் என பல இடங்களில் பொருட்கள் இருப்பதாக நினைத்தே உருவாக்கவேண்டிய நிர்பந்தம். எந்தக் குறையும் இல்லாமல் உழைத்து முடித்த சாபு சிரிலின் கைகளுக்கு ராஜ வளையமே அணிவிக்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க