சிறந்த ஆடை வடிவமைப்பு

சிறந்த ஆடை வடிவமைப்பு

ரமா ராஜமௌலி, பிரசாந்தி திப்ரினேனி 

`பாகுபலி’


சரித்திரக் கதைக்கு உடை வடிமைக்கும் சவால் பணியில் சபாஷ் வாங்கியது, ரமா ராஜமௌலி, பிரசாந்தி திப்ரினேனி அடங்கிய `பாகுபலி’ இருவர் அணி. தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளில் பயணிக்கும் கதைக்கு, ஆடை வடிவமைப்பில் இவர்கள் கையாண்டது புதுமை டெக்னிக். குட்டீஸுக்கு மிகப் பிடித்த அமர்சித்ரகதா காமிக்ஸில் வரும் உடை அலங்காரம்தான் இவர்களின் ரெஃபரென்ஸ். அதனால்தான் வல்லாள தேவனும் பாகுபலியும் பார்க்க அர்ஜுனனையும் துரியோதனனையும் நினைவூட்டினார்கள். எத்தனை ஆயிரம் பேருக்கு எத்தனை விதமான ஆடைகள், அணிகலன்கள்?! உறுதியான விசுவாசம் நிரம்பிய அடிமையான கட்டப்பாவுக்கான உடை முதல், நாடோடி அரக்கர் குல காகதீயர்களுக்கான கரிய ஆடைகள் வரை ஒவ்வொன்றும் ஓஹோ ரகம். பிரமாண்ட ஆராய்ச்சியும் உழைப்பும் நிரம்பிய இந்த டிசைன்கள், `பாகுபலி’ வெற்றியின் அசத்தல் அணிகலன்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick