சிறந்த தயாரிப்பு | Best production of Kollywood 2015 - Ananda VIkatan Awards | ஆனந்த விகடன் விருதுகள்
சிறந்த கதை - சிறந்த திரைக்கதை

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2016)

சிறந்த தயாரிப்பு

சிறந்த தயாரிப்பு

க்ரிஸ் பிக்சர்ஸ், ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்ப்பரேஷன்

`குற்றம் கடிதல்’


பேய்களும் ஒன் லைன் பன்ச் காமெடி படங்களும் கல்லா கட்டிக் கொண்டிருக்கும் சூழலில், குழந்தைகள் நலன் பற்றிய படம். அதுவும் கமர்ஷியல் கலர் இல்லாமல், உண்மையான சமூக அக்கறையுடன் ஒரு கதை சாத்தியமா? இயக்குநராக, நடிகராக தத்தமது கிராஃபை ஏற்றிக்கொள்ள ஒரு படம் பண்ணலாம். ஆனால், தயாரிப்பாளராக அதைச் செய்வது அத்திப்பூதான். அந்த வகையில் `குற்றம் கடிதல்’ படத்தை குற்றமின்றி எடுத்த தயாரிப்பாளரை ஆரத்தழுவி வரவேற்கலாம். இதுபோன்ற முயற்சிகளே சினிமாவின் ஆக்ஸிஜன்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க