சிறந்த நடிகர் ஜெயம் ரவி - `பூலோகம்’ | Best Actor Jayam Ravi BhooloHam - Ananda Vikatan Awards | ஆனந்த விகடன் விருதுகள்

சிறந்த நடிகர் ஜெயம் ரவி - `பூலோகம்’

ஜெயம் ரவிக்கு இது இரண்டாவது இன்னிங்ஸ். சாஃப்ட் வாய்ஸ் சாக்லேட் ஹீரோ இமேஜை உடைத்து, ஆக்‌ஷன் அவதாரம் எடுத்தார்.  உடம்பை முறுக்கேற்றி, முரட்டு பாக்ஸர் பூலோகமாக புத்திமதி சொல்லி நாக்அவுட் செய்தது மரண மாஸ். `தனி ஒருவன்’ முழுக்க கோபக்கார இளைஞனாகப் புருவம் சுருக்கி மிரட்டியெடுத்து 100 டிகிரியில் கொதித்தார்.  `ரோமியோ ஜூலியட்’டில் `தூவானம் தூவத் தூவ...’ மயங்கி மயங்கிப் பண்ணிய ரொமான்ஸுக்கு பெண்கள் பக்கம் புயலடித்தது. கதைத் தேர்வில் கவனம் காட்டுகிற அதே நேரம், தன் உடல்
மொழியில் ரவி காட்டும் அக்கறை, அபாரம். 2015-ம் ஆண்டில்  தான் நடித்த நான்கில் மூன்று படங்களை ஹிட் லிஸ்ட்டில் ஏற்றிய ஜெயம் ரவிக்கு இது சக்சஸ் ஆண்டு. `அண்ணன் மேல் சவாரி செய்கிறார்’ என்ற இமேஜையும் தள்ளி, தனி ஒருவனாக தலை நிமிர்ந்திருக்கும் ஜெயம் ரவிக்கு தம்ஸ்அப்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick