சிறந்த குணச்சித்திர நடிகர் சத்யராஜ் - `பாகுபலி’

`பாகுபலி’யின் சிங்க கர்ஜனை கட்டப்பாவுடையது. எம்.ஜி.ஆர் ரசிகனுக்குக் கிடைத்த பிரமாண்ட கதாபாத்திரம். கிடைத்த கேப்பில் எல்லாம் செம ஸ்கோர் செய்த சிம்பிள் ஸ்கிரீன் ப்ரசென்ஸ். சிவாஜிக்குப் பிறகு தன் குரலாலும் உடலாலும் மிரளவைக்கிறார் சத்யராஜ். பல்வாள் தேவனுக்கு அடங்கிப்போகும் அடிமை, அஸ்லம் கானை தன் வாள்வீச்சால் மிரளவைக்கும் வீரன், பாகுபலி உருவத்தில் இன்னொருவனைக் கண்டதும் மிரண்டு வணங்கும் விசுவாசி... என சத்யராஜ் செய்தது தன் வாழ்நாளுக்குமான பாத்திரம்... வெளிப்படுத்திய நடிப்பில் அத்தனை காத்திரம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!