சிறந்த வில்லி ஆஷா சரத் - `பாபநாசம்’

`பாபநாசம்’ வேட்டைக்காரி. இப்படி ஒரு முரட்டுப் பெண்ணை தமிழ் சினிமா கண்டது இல்லை. கண்பார்வையில், உடல்மொழியில் ஆஷா சரத்தின் அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் ஆல் ஷோஸ் அப்ளாஸ் கேட்டன. `ரொம்ப ரொம்பக் கெட்டிக்காரத்தனமா எல்லாத்தையும் இணைச்சு கதை ரெடி பண்ணியிருக் காங்க’ என்ற அவருடைய ஆண்மை கலந்த மலையாளத் தமிழ் மாடுலேஷனுக்கு எக்கச்சக்க ஃபேன்ஸ். நிமிர்ந்து நின்று, புருவம் குவித்து, கூர்மையாக முறைத்துப் பார்க்கும் முகத்தில் அத்தனை ஆணவம். கருணை இல்லாத காவல் துறை அதிகாரியாகவும் தன் மகனை இழந்த பரிதாபத் தாயாகவும், இரட்டை முகங்கள் காட்டி மிரளவைத்தார் இந்த அழகு சேச்சி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்