சிறந்த புதுமுக நடிகர் சாய் ராஜ்குமார் - `குற்றம் கடிதல்’

நாயகியைச் சுற்றி இயங்குகிற ஒரு கதை, அதில் நாயகனுக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லை. இருந்தும் தனித்துத் தெரிந்தார் `குற்றம் கடிதல்’ நாயகன் சாய் ராஜ்குமார். பெரிய தாடியும் பரட்டைத் தலையுமாக அவருடைய பாத்திரம் உணர்ந்து நடித்திருந்தார். தன் அகல விழிகளால் அவர் கொடுத்த அத்தனை எக்ஸ்பிரஷனும் டிஸ்டிங்ஷன். மனைவி சிக்கலில் மாட்டிக்கொண்டதை உணர்ந்து, மருத்துவமனைக்கு வந்து, பாதிக்கப்பட்ட பையனின் பெற்றோரைச் சந்திக்க அடம்பிடிக்கும் காட்சியிலும், உருக்குலைந்து கிடக்கும் மனைவிக்கு ஆறுதல் தரும் லவ்வபிள் கணவனாகவும் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். தனக்கான பாத்திரங்களைத் தேடிக் கண்டடைந்து நடித்தால், நிச்சயம் காத்திருக்கிறது இந்தப் புதுமுக நடிகனுக்கான சக்சஸ்ஃபுல் எதிர்காலம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick