சிறந்த புதுமுக நடிகை - தீபா சன்னிதி - `எனக்குள் ஒருவன்’ | Best debutant actress - Deepa Sannidhi - Yenakkul Oruvan - Ananda Vikatan Awards | ஆனந்த விகடன் விருதுகள்
சிறந்த கதை - சிறந்த திரைக்கதை

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2016)

சிறந்த புதுமுக நடிகை - தீபா சன்னிதி - `எனக்குள் ஒருவன்’

றிமுகப் படத்திலேயே ஸ்கோர் பண்ணிய அபார நடிகை, இந்தக் கன்னடத்துப் பைங்கிளி. ஐட்டம் சாங்கில் கவர்ச்சி காட்டி ஆடும் நடிகையாகவும், அடக்க ஒடுக்க மிடில் கிளாஸ் பெண்ணாகவும் `எனக்குள் ஒருவன்’ படத்தில் இவர் காட்டிய வித்தியாசம், வெரைட்டி வெடி.  முகத்தில் எந்நேரமும் வெடிக்கக் காத்திருக்கும் கலவரத்தைத் தேக்கிவைத்துக்கொண்டு  இவர் காட்டிய முகபாவனைகள் அழகோ அழகு. காமெடி முதல் கண்ணீர் வரை வேண்டிய அளவில் வெளிப்படுத்தி, தீபாவின் கண்கள் தீபாவளி காட்டின. ‘நடிக்கத் தெரிந்த நடிகை’ பட்டியலுக்கு 2015-ம் ஆண்டின் நல்வரவு, தீபா சன்னிதி.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க