திறமைக்கு மரியாதை! | Ananda Vikatan Awards - Editorial page | ஆனந்த விகடன் விருதுகள்
சிறந்த கதை - சிறந்த திரைக்கதை

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2016)

திறமைக்கு மரியாதை!

னந்த விகடன் விருதுகள் எப்போதுமே ஸ்பெஷல்!

தமிழர் திறமையை, தமிழர் சாதனைகளைக் கொண்டாட விகடன் அமைத்துத் தரும் மேடைதான் ஆனந்த விகடன் விருதுகள். 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆனந்த விகடன் விருதுகளுக்கு, இது 9-வது வருடம். கலைஞர்களின் திறமையும் ரசிகர்களின் வரவேற்பும் இணையும் புள்ளியைக் கச்சிதமாகக் கணிப்பதே, நம் தனிச் சிறப்பு!

விருது என்பது, தனிப்பட்ட ஒரு கலைஞனுக்கான பாராட்டு மட்டுமா என்ன... அந்தத் துறையின் திறமை, நவீன தலைமுறைக்கு ஏற்ப உயர்ந்திருக்கிறது என்பதற்கான அடையாளம்; கலைஞர்களை அடுத்த கட்டத்துக்கு செயல்படத் தூண்டும் எரிபொருள். அந்த வகையில் தமிழகத்தின் ஆகச் சிறந்த திறமைகளைத் தேடிக் கண்டெடுப்பதும், கொண்டாடி அங்கீகரிப்பதுமாக, சமூகத்தின் போக்கைத் தீர்மானிக்கும் அனைத்து அம்சங்களின் மீதும் விகடன் வெளிச்சம் பாய்ச்சும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க