சிறந்த கார் க்விட்

ரெனோ

ட்ஜெட் கார்களில் மார்க்கெட் லீடராக தனி ஆட்சி நடத்திய மாருதி ஆல்ட்டோ 800 காருக்குப் போட்டியாகக் களமிறங்கி, மார்க்கெட் ஷேரைப் பிரித்த கார் ரெனோ க்விட். பட்ஜெட் கார் என்றாலே காருக்குள் எந்த வசதியும் இருக்காது என்பதுதான் இவ்வளவு காலமும் இருந்த வரையறை. ஆனால் டச் ஸ்கிரீன், ஜிபிஎஸ் வசதி, 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கி எனப் பெரிய கார்களுக்கே டஃப் ஃபைட் கொடுத்திருக்கிறது க்விட். ஐந்து பேர் தாராளமாக உட்கார்ந்து பயணம் செய்யலாம் என்பதோடு, ரெனோவின் புதிய 800சிசி இன்ஜின் மைலேஜிலும் கில்லி. ரூ 3 - 5 லட்சத்துக்குள், தரமான கார் வேண்டும் என்றால் ரெனோ க்விட் நல்ல சாய்ஸ்’ எனச் சொல்லும் அளவுக்கு, பட்ஜெட் கார்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றதில் வெற்றிபெற்றிருக்கிறது க்விட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்