சிறந்த பைக் ஜிக்ஸர் SF

சுஸூகி

மார்க்கெட்டில் செம ஹிட் அடித்த ஒரு பைக்கை அடிப்படையாகக்கொண்டு புதிய மாடலைக் களமிறக்கும்போது, பழைய மாடலுக்கும் இதற்குமான ஒப்பீடுகள் தானாகவே ஆரம்பிக்கும். ஆனால், பழைய பைக்கைவிட டிசைனிலும் பெர்ஃபாமென்ஸிலும் முன்னேறி, சுஸூகியின் விற்பனையை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது,  ஜிக்ஸர் SF. நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான ஜிக்ஸரில், ஃபுல் ஃபேரிங் சேர்க்கப்பட்டு உருவான பைக்தான் ஜிக்ஸர் SF. கூடுதல் பாகங்கள் பயன்படுத்தப்படுவதால், பைக்கின் விலை மற்றும் எடை கட்டாயம் அதிகமாகும். இதனால் பைக்கின் செயல்திறன் பாதிக்கும். இருப்பினும், தரமான இன்ஜினீயரிங் மூலம் சிக்ஸர் அடித்திருக்கிறது சுஸூகி ஜிக்ஸர். 2015-ம் ஆண்டில் 1 லட்சம் ரூபாய்க்குள் விற்பனைக்கு வந்த இந்த மினி ஸ்போர்ட்ஸ் பைக், பல லட்சம் இளைஞர்களின் கனவு பைக்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்