நமக்கான வெளிச்சம்!

ராஜுமுருகன்

ர்மபுரி பக்கம் நாகர்கூடலில் வறட்டுப் பொட்டலுக்கு நடுவே, இயற்கையின் ஈரம் மாறாமல் கிடக்கிறது ‘புவிதம்’. அங்கே நடந்த, ஆண்டு கலாசார நிகழ்வுக்காக அழைத்துப்போனார் நண்பர் ‘நிழல்’ சுரேஷ். முதலில் என்னை ஈர்த்தது பள்ளியின் பெயர். அப்புறம் அதன் நடைமுறை. பிள்ளைகளின் மேல் திணிக்கப்படும் அறிவு வன்முறை எதுவும் இல்லை. தேர்வில் வென்றால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்கிற எந்திர உருவாக்கம் இல்லை. சமகாலப் பாடங்களோடு, இயற்கை, விவசாயம், பறவைகள் குறித்த அன்பையும் அறிவையும் ஊட்டுகிறார்கள். கட்டணம் என்பது மிக, மிகக் குறைவு. இந்தப் பள்ளியை நடத்துகிற மீனாட்சியக்கா, உத்தரப் பிரதேசத்துக்காரர். சுத்தமான தமிழ் பேசுகிறார்.

‘`இருபது வருஷத்துக்கு முன்னாடி இந்த மண்ணைக் கண்டடைஞ்சேன். ஏதோ ஒரு மனதை, அன்பை, நிலத்தை நாம் அடையாளம் காண்கிற தருணம்... உண்மையிலேயே ஓர் அதிசயம்தான். அது எப்படி நடந்துச்சுனு திட்டவட்டமா சொல்ல முடியாது. அப்பிடித்தான் இந்த இடத்துக்கு நான் வந்ததும், இந்தப் பள்ளியை ஆரம்பிச்சதும். `இயற்கையைவிட்டு விலகி விலகிப் போய்க்கிட்டே இருக்கிற ஒரு சமூகம் என்னாகும்?’கிற கேள்விதான் என்னைத் துரத்திட்டே இருந்தது. அப்போ அதுக்கான தீர்வை குழந்தைகளிடம் இருந்துதானே ஆரம்பிக்கணும்... விதையில் இருந்துதானே தொடங்கணும்? அந்த யோசனையிலதான் இந்தப் பள்ளியைத் தொடங்கினேன். இந்தக் கரட்டுக்காட்டைச் சீரமைச்சு, இந்தப் பள்ளியைக் கட்டி, கிராமத்துக் குழந்தைகளைக் கொண்டுவந்து, இந்தப் பள்ளியின் வழிமுறைகளை பெத்தவங்களுக்குப் புரியவெச்சு... பத்து வருஷ வேலையாகிருச்சு. இதானே என் மண்... இவங்கதானே என் மக்கள்... இந்த சந்தோஷம்தான் இப்போ என்னை வழிநடத்துது...” என அவர் பேசும்போது, புவிதம் என்பதற்கான அர்த்தம் தெரிந்தது. ‘புவியின் இதம்!’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்