சிறந்த சிறுகதைத் தொகுப்பு மயான காண்டம் லஷ்மி சரவணக்குமார், உயிர்மை பதிப்பகம்

‘எனது நேரடியான அனுபவங்களில் இருந்து எழுதப்பட்டவை அல்லது என் சம்பந்தமான மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்டவை’ என தனது சிறுகதைகளைப் பற்றி முன்னுரையில்  குறிப்பிடுகிறார் லஷ்மி சரவணக்குமார். மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை வெகுநுட்பமாக அணுகுவதில் இருந்து இந்தக் கதைகள் உருப்பெற்றிருக்கின்றன. ‘மயான காண்டம்’-மச்சக்காளை, ‘அஜ்ஜி’-பாட்டி, ‘வள்ளி திருமணம்’ -கலைமகள் என வாசித்து முடித்த பிறகும் நினைவில் இருந்து நீங்க மறுக்கின்றன கதாபாத்திரங்கள். காசி மயானமோ, மருத்துவமனை பொது வார்டோ, மழை சூழ்ந்த நாடக மேடையோ, சூழலோடு சேர்ந்து நாமும் பயணிக்கிறோம். மனித உணர்வுகளின் மகத்துவத்தை அழகியலோடு பேசும் சிறுகதைகளின் தொகுப்பு இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick