சிறந்த கவிதைத் தொகுப்பு - திருச்சாழல்

கண்டராதித்தன் புது எழுத்து பதிப்பகம்

வீன வாழ்வின் அபத்தத் தருணங் களை, நம்பிக்கைகளை, அழகை கவிதைகளில் மிகையின்றி காட்சிப் படுத்துகின்றன கண்டராதித்தனின் கவிதைகள். திட்டமிடப்பட்ட மொழியோ வடிவமோ இன்றி விஷயத்தின் போக்குக்கு எழுதும் எளிமை, இவரது தனித்த அடையாளம். `எங்காவது கொடும்பாவி கட்டியிழுத்தால், கண்டிப் பாக உங்களை நினைப்பேன்!’ என கொந்தளிப்பான மனித உணர்வுகளை, எளிய வரிகளில் நம் மீது கடத்துகிறார். காமம், குரூரம், கயமை போன்ற வற்றோடு அன்பும் சுரக்கும் மனிதமனம் எவ்வளவு விசித்திரம்? இதை கண்டரா தித்தனின் கவிதைகள் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன. மிகக் குறை வாகவே எழுதும் இவரின் மூன்றாவது தொகுப்பு இது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick