சிறந்த சிறுவர் இலக்கியம் பந்தயக் குதிரைகள் - பாலு சத்யா

அம்ருதா பதிப்பகம்

ள்ளி விடுமுறையில் சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு வரும் சிறுமி கீதா, தன் அண்ணன் மற்றும் நண்பர்களுடன் சென்னையின் முக்கிய இடங்களைக் காணச் செல்கிறாள். பயண வழியில் அண்ணன் காணாமல்போய் விடுகிறான். தனது புத்திசாலித்தனத்தாலும் முயற்சியாலும் அண்ணனைக் கண்டுபிடிக்கிறாள் கீதா. விடுமுறை முடிந்து வீட்டுக்குச் செல்லும் சிறுமி, அப்பாவின் வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகளால் சந்தேகம்கொண்டு ஒரு பிரச்னையில் இருந்து அப்பாவை மீட்கிறாள். இந்த இரண்டு சம்பவங்களில் அவள் சந்திக்கும் மனிதர்கள், சூழல்கள், பிரச்னைகள் என விறுவிறுப்பாக நகர்கிறது இந்தச் சிறுவர் நாவல். வழக்கத்துக்கு மாறான களம். மாறிவரும் உலகில் சிறுவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழல்களுக்கு அவர்களைத் தயார்ப்படுத்தும் நாவல். அதேசமயம் சிறுவர் இலக்கியம் என்ற வகையில் எல்லை தாண்டாமல் அளவாக, அழகாக தன் பந்தயக் குதிரையைப் பாயவிடுகிறார் பாலு சத்யா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick