சிறந்த நாவல் - மொழிபெயர்ப்பு கசாக்கின் இதிகாசம் - ஓ.வி.விஜயன்

தமிழில்: யூமா வாசுகி காலச்சுவடு பதிப்பகம்

லையாள இலக்கியத்தில் நவீனத்துவத்தைத் தொடங்கிவைத்த நாவல் `கசாக்கின் இதிகாசம்’. கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் உள்ள வறண்ட கிராமம் கசாக். இஸ்லாமியர்களும் இந்துக்களும், தத்தமது பாரம்பர்ய நம்பிக்கைகளோடும் விநோதமான சடங்குகளோடும் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்தக் கிராமத்துக்கு, அரசால் அனுப்பப்படுகிறான் ஓர் இளம் ஆசிரியன். படிப்புவாசனை தயங்கித் தயங்கி நுழையும் அந்தக் கிராம மக்களின் விநோதமான நம்பிக்கைகள், சடங்குகள், வாழ்க்கைமுறை, அவர்களுக்கு இடையே ஏற்படும் பிணக்குகள் அனைத்துக்கும் சாட்சிபூதமாக இருக்கிறான். கதாபாத்திரங்கள், வெயிலில் அலையும் தும்பிகள் போல நாவல் எங்கும் உலவிக்கொண்டிருக்கிறார்கள். ஓ.வி.விஜயனின் தமிழ் கலந்த மலையாளத்தை, மொழிபெயர்ப்பில் மிக லாகவமாகக் கையாண்டிருக்கிறார் யூமா வாசுகி. இரு மொழிகள் கலந்த மொழிநடை, வாசிப்பவர்களை ஒரு புதிய அனுபவத்துக்குக் கொண்டுசெல்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்