சிறந்த சிறுகதைத் தொகுப்பு - மொழிபெயர்ப்பு

எருது தமிழில்: கார்த்திகைப் பாண்டியன் எதிர் வெளியீடு

மிழ்க் கதைப் பரப்புக்குள் அதிகம் அறியப்படாத உலகச் சிறுகதையாளர்களின் 10 கதைகளைக் கொண்டிருக்கிறது ‘எருது’. இந்த நூலின் வழி அமெரிக்க, பொலிவிய, எகிப்திய  சிறுகதைப் பரப்பின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்கள், தமிழ் கதைவெளிக்கு அறிமுகமாவது முக்கியமானது. வாய்மொழிக் கதை வடிவில் நிகழும் ரைஸ் ஹ்யூக்ஸ் எழுதிய `கல்லறை சாட்சியம்’ முதல், வறுமையும் விரகதாபமும் கலந்து நிற்கும் யூசுப் இதிரிஸின் `சதையாலான வீடு’, ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய செவ்வியல் தன்மைகொண்ட `கவிஞன்’ வரை, அத்தனை கதைகளும் உலகப் பண்பாடுகளின் கலைடாஸ்கோப்பாக விரிகின்றன. எளிய மொழிநடையில்  கதைகளைத் தொகுத்து மொழிபெயர்த்த கார்த்திகைப் பாண்டியன் ஒரு கவிஞர் என்பதால், தன் மொழிபெயர்ப்பின் வழியே உலகின் புதுப்புது பண்பாட்டுச் சித்திரங்களை லாகவமாக வரைவதோடு, வாசகர்களையும் அதற்குள் இழுத்துக்கொண்டுபோகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்