சிறந்த கட்டுரைத் தொகுப்பு - மொழிபெயர்ப்பு

தவிர்க்கப்பட்டவர்கள் இந்தியாவின் மலம் அள்ளும் மனிதர்கள் - பாஷாசிங் தமிழில்: விஜயசாய், விடியல் பதிப்பகம்

சுதந்திர இந்தியாவின் 68 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். மனிதக் கழிவை, இன்னும் மனிதர்கள் அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். நாம் முகம் சுளிக்கிறோம். உண்மையாக நாம் நமது சாதிய உணர்ச்சிகளில் இருந்து எழும் துர்நாற்றத்துக்குத்தான் முகம் சுளிக்க வேண்டும். பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமாகிய பாஷாசிங், வெவ்வேறு அரசியல் சூழலும் கலாசாரமும்கொண்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குப் பயணித்து, மலம் அள்ளும் மனிதர்களைச் சந்தித்து அவர்களின் குரலை ஆவணப்படுத்தியிருக்கிறார். நாம் இதுவரை அறிந்திராத அருவருப்புகளில் கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் தங்களது உணவுக்காக உழன்றுகொண்டிருக்கிறார்கள். இந்தத் துர்நாற்றத்தில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ளப் போராடும் மக்களின் அவலத்துக்கும் நம்பிக்கையுணர்ச்சிக்கும் காகிதச் சாட்சியம் இந்தப் புத்தகம். மிகுந்த அரசியல் நுட்பம்மிக்க எழுத்தின் மொழிபெயர்ப்புக்கு உழைத்த விஜயசாய் பாராட்டுக்குரியவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick