சிறந்த சிறுவர் இலக்கியம் - மொழிபெயர்ப்பு

மாத்தன் மண்புழுவின் வழக்கு - பேராசிரியர் எஸ்.சிவதாஸ், தமிழில் - யூமா வாசுகி - புக்ஸ் ஃபார் சில்ரன்

`அன்புடையீர்... எனக்கு வயதாகிவிட்டது. இத்தனை வருடங்கள் நிலத்தை உழுது களைத்துவிட்டேன். எனக்கு ஓய்வூதியம் கொடுங்கள்’ என ஒரு விவசாயி கேட்டால் நியாயம் இருக்கிறது. ஒரு மண்புழு கேட்டால்? `மாத்தன்’ என்ற மண்புழு இப்படியான ஒரு கோரிக்கையுடன் நீதிமன்றத்தை நாடுகிறது. அது, எப்படி எல்லாம் விவசாயிகளுக்கு உதவுகிறது, மண்புழுக்கள் விவசாயத்துக்கு எவ்வளவு அவசியம் என்பது எல்லாம் மாத்தனின் வாதத்தில் விவரிக்கப்படுகிறது. கூடவே இயற்கை வேளாண்மை, இயற்கையின் முக்கியத்துவம், விவசாய நிலத்தைப் பாழ்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் என பல உண்மைகள் சிறுவர்களுக்குப் புரியும்விதத்தில் கதையோடு கதையாகச் சொல்லப்படுகின்றன.

எஸ்.சிவதாஸின் தேர்ந்த கதை சொல்லலை, எளிய தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் யூமா வாசுகி. இயற்கையின் இயங்கியலை, இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்துவைக்க மிகச் சிறந்த நூல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்