சிறந்த சிற்றிதழ் - புது விசை

டுக்கப்பட்டவர்களுக்கான அரசியல், கலை, பண்பாட்டை உலகளாவிய தளத்தில் பேசும் கலாசாரக் காலாண்டிதழ் `புது விசை’. சமீபமாக இந்தியாவுக்குள் கடும்நோயாகப் பரவிவரும் சகிப்பின்மை, சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து உரத்துப் பேசும் தலையங்கங்களில் இருந்தே  ஆரம்பமாகிவிடுகிறது `புது விசை’யின் வீச்சான அரசியல். எரியும் பிரச்னைகளை கவிதைகளாக, கட்டுரைகளாகப் பேசுவதும், நடப்பு அரசியலை இடதுசாரிக் கண்ணோட்டத்தோடு அணுகுவதுமே `புது விசை’யின் தனித்தன்மை. இந்த இதழில் வெளியாகி இருக்கும் லத்தீன் அமெரிக்காவின் முக்கிய இசைக் கலைஞரான விக்டர் ஹாரா குறித்த கட்டுரை முக்கியமான பதிவு. உள்ளடக்கத்தில் மாற்றுச் சிந்தனை, இதழ் வடிவமைப்பில் எளிமை, எளியவர்களின் உரிமைகள் மீது காட்டும் அக்கறை, பாசிசக் கருத்துக்கள் மீதான எதிர்வினை போன்றவை `புது விசை’யை முக்கிய இதழாக முன்னிறுத்துகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick