சிறந்த பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம்

கிரிக்கெட்

முன்னாள் இந்திய, தமிழக கிரிக்கெட் வீரரான ஸ்ரீதரன் ஸ்ரீராம் 20-20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். வழக்கமாக ஆஸ்திரேலிய வீரர்களைத்தான், உலக நாடுகள் தங்கள் பயிற்சியாளர்களாக நியமிக்கும். முதல்முறையாக இந்திய வீரர் ஒருவரை ஆஸ்திரேலிய நிர்வாகம் தங்கள் அணிக்கு ஆலோசகராக நியமித்திருக்கிறது. 39 வயதான ஸ்ரீராம், முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் 32 சதங்களும் 36 அரை சதங்களும் அடித்தவர். ஆனால் அப்போது நிலவிய அரசியலால் இந்திய அணியில் இவருக்குச் சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை. சென்னையில் `கிரிக்கெட் ட்ரோம்’ பயிற்சி மையத்தின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று, பல இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிவரும் ஸ்ரீராமை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடையாளம் கண்டு அங்கீகரித்திருப்பது தமிழனுக்குப் பெருமை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்