சிறந்த விளையாட்டு வீரர் - ரவிச்சந்திரன் அஷ்வின்

கிரிக்கெட்

ஷ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது பொற்காலம். ஐ.சி.சி ரேங்கிங்கில் உலகின் நம்பர் 1 பந்து வீச்சாளராக, நம்பர் 1 ஆல்ரவுண்டராக இடம்பிடித்திருக்கும் முதல் தமிழர்.

42 வருடங்களுக்குப் பிறகு சிறந்த ஆல்ரவுண்டராக முதல் இடம் பிடித்திருக்கும் இந்தியர். 2015-ம் ஆண்டு விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் எடுத்த விக்கெட்டுகள் மொத்தம் 62. டெஸ்ட், ஒரு நாள், 20-20 என கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மேட்டிலும் இப்போது இந்தியாவின் சிறந்த வீரர் அஷ்வின். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் அஷ்வின் காட்டிய வேகம்தான், இவரை இந்திய அணிக்குள் அழைத்துச் சென்றது. பேட்ஸ்மேன்களைக் கண்டு பயம்கொள்ளாமல் பந்து வீசும் துணிச்சல், கையாளும் புதுப்புது உத்திகள், ஆட்டத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப பந்து வீசும் திறன்... இவையே அஷ்வினை உச்சம் தொட வைத்திருக்கின்றன. வெல்டன் அஷ்வின்.'

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்