சிறந்த விளையாட்டு வீராங்கனை - எம்.மகாலட்சுமி

செஸ்

துரங்கத் தமிழச்சி. 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த மகாலட்சுமிக்கு வயது 17. ‘மகாலட்சுமி செஸ் ஆடும் விதம் என்னை வியக்கவைக்கிறது. செஸ் விளையாட்டில் எனது வாரிசு என இவரைச் சொல்லலாம்’ - ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்தின் பாராட்டு இது. ஏழு வயதில் இந்திய ஜூனியர் சாம்பியன் ஆன மகாலட்சுமியின் கிராஃப் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வேலை அப்பாவுக்கு. மூன்று சகோதரிகள். எளிய குடும்பத்தில் சகோதரிகளுடன் பொழுதுபோக்காகத் தொடங்கிய செஸ் விளையாட்டு, மகாலட்சுமியை சர்வதேச அரங்குகளில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. ப்ளஸ் டூ மாணவியான மகாலட்சுமிக்கு, சீனியர் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதே லட்சியம். வாழ்க... வளர்க... வெல்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்