சிறந்த டி.வி சேனல் | Best Television channel 2015 - Ananda Vikatan Awards | ஆனந்த விகடன் விருதுகள்

சிறந்த டி.வி சேனல்

சிறந்த டி.வி சேனல்

பாலிமர் நியூஸ்

2015-ன் இறுதியில் சென்னை மற்றும் கடலூரைப் புரட்டிப்போட்ட மழை வெள்ளத்தின் பாதிப்புகளை களத்தில் இருந்து காணொளிக் காட்சிகளாக வழங்கியதில் பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி முன்னணி வகித்தது.  தொலைத்தொடர்பு வசதிகள் முடங்கிய நிலையில், சென்னையின் நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்பிய தமிழ்நாட்டின் இதர பகுதி மக்களுக்கு உண்மை நிலவரத்தை மிகை இல்லாமல் வழங்கியது. மழை வெள்ளம் தவிர்த்த இதர செய்திகளிலும் ஆண்டு முழுவதும் முத்திரை பதித்தது. மக்களை நேரடியாகப் பாதிக்கும் உள்ளூர் செய்திகளுக்கு, கூடுதல் முக்கியத்துவம் தருவது, விவாத நிகழ்ச்சிகளைத் தவிர்த்து செய்திகளுக்கு முன்னுரிமை தருவது... என ஒரு செய்தித் தொலைக்காட்சிக்கான உழைப்பும் முனைப்பும் பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியை முன்வரிசையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றன. பலே பாலிமர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick