சிறந்த டி.வி நிகழ்ச்சி

சிறந்த டி.வி நிகழ்ச்சி

ரௌத்ரம் பழகு, புதிய தலைமுறை

`ரௌத்ரம் பழகு’ ஒவ்வொரு எபிசோடும் ஒரு துல்லியமான ஆவணப்படம். அரியலூர் பகுதியில் சிமென்ட் ஃபேக்டரியால் பாதிக்கப்படும் கிராமங்களின் நிலை, திருநங்கைகளின் வாழ்க்கைச் சூழல் என,  சமூகம் காண மறந்த, காண மறுக்கிற இருண்ட பகுதிகளின் மீது காட்சி வெளிச்சம் பாய்ச்சுகிறது இந்த நிகழ்ச்சி. இவர்கள் தேர்வுசெய்யும் நிகழ்ச்சிகளுக்கான களம், லட்சக்கணக்கான மக்களை அன்றாடம் நேரடியாகப் பாதிக்கக்கூடியது. விருதுநகர் மாவட்டத்தில் உடல்நலக் குறைவால் முடங்கிக்கிடக்கும் முதியவர்்களை, உறவினர்களே சேர்ந்து உயிரைப் போக்கும் அவலக் கொடுமையை உரத்துச் சொன்ன ரௌத்ரம் பழகு நிகழ்ச்சி, தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் அவசியமான கோபம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick