சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் - தொகுப்பாளினி

சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்

குணசேகரன் ,நேர்படப் பேசு

புதிய தலைமுறை

தமிழ்த் தொலைக்காட்சிகளின் பேச்சரங்க நிகழ்ச்சிகளில் நிதானத்தையும் கண்ணியத்தையும் கொண்டுவந்த நெறியாளர். மாற்றுக் கருத்தாளர்களை ஓர் இடத்தில் ஒன்றிணைத்து விவாதிக்கும் நிகழ்ச்சிகளில், கூச்சலும் குழப்பமும் மிகுவது இயல்பு. எனினும், பேசுபொருளின் வரம்பு மீறாமல், வரம்பு மீறுவோரை இடைமறித்து இழுத்துவரும் சவால் பணியைச் சரியாகச் செய்கிறார் குணசேகரன். தமிழக அரசியல் வரலாற்றின் கடந்தகால நிகழ்காலப் போக்குகளை ஆழ்ந்து கவனித்து, பங்கேற்பாளர்களிடம் குணசேகரன் கேட்கும் குறுக்குக் கேள்விகள், அரசியல் விவாத நிகழ்ச்சிகளின் தரத்தை அடுத்த கட்டத்துக்கு இட்டுச்செல்கிறது. ஊடகங்கள் குறித்த விமர்சனங்களையும் விவாதப் பொருளாக்கிக் கவனம் ஈர்த்த குணசேகரன், நேர்படப் பேசும் சீர்மிகு நெறியாளர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick