சிறந்த நெடுந்தொடர்

சிறந்த நெடுந்தொடர்

தெய்வமகள், சன் டி.வி

சத்யாவும் காயத்ரியும்தான் இந்த ஆண்டும் தமிழ்த் தொலைக்காட்சிகளை ஆக்கிரமித்த செல்லப் புயல்கள். வன்முறை எதுவும் இல்லாமல், சீரியல் குணங்கள் தவிர்த்து பெண்களுடைய அன்றாடப் பிரச்னைகளை மட்டுமே பேசுகிற எளிமைதான் `தெய்வமகள்’ நெடுந்தொடரை நம்பர் ஒன்னாக நிலைக்கவைத்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் திருப்புமுனை, ஒவ்வொரு பாத்திரத்துக்கும் பிரத்யேகக் குணாதிசயங்கள், கவித்துவத் தருணங்கள், நினைத்துப்பார்க்கவைக்கும் வசனங்கள் என ஒவ்வொரு நாளும் உற்சாகம் கூட்டுகிறாள் `தெய்வமகள்’. எங்குமே எல்லை மீறாத இயல்பைத் தொடர்ந்து காக்கிற இயக்குநர் எஸ்.குமரன் பாராட்டுக்கு உரியவர். தமிழகக் குடும்பப் பெண்களின் தோழியாக வலம்வரும் வாணி, நடிப்பிலும் அபார ராணி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick