சிறந்த பண்பலை | Best FM Channel 2015 - Ananda Vikatan Awards | ஆனந்த விகடன் விருதுகள்
சிறந்த கதை - சிறந்த திரைக்கதை

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2016)

சிறந்த பண்பலை

சிறந்த பண்பலை

ஹலோ எஃப்.எம்

பண்பலைகளில் குரல் அலைகள் மூலம் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது ஹலோ எஃப்.எம். ‘லெஸ் டாக் மோர் சாங்ஸ்’ என பல எஃப்.எம்-கள் பாடல்களை ஓடவிட்டு ஆர்.ஜே-க் களுக்கு ஓய்வுகொடுக்க, நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடு்க்கிறது ஹலோ எஃப்.எம். உள்ளூர் முதல் தேசியச் செய்திகள் வரை அனைத்தையும் அலசி, ஆராயும் காலை நேரம் ‘ஹலோ தமிழா’ நிகழ்ச்சி, அறிவுக்கு விருந்து. ரேடியோவில் கிரிக்கெட் கமென்ட்ரிகளை இந்த 4-ஜி தலைமுறைக்கும் கடத்தி, டாப் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கிறது `சொல்லியடி’ நிகழ்ச்சி. குடும்பத் தலைவிகளுக்கு டிப்ஸ் சொல்லும் ‘அஞ்சறைப்பெட்டி’, மாலை நேரத்தைக் கலகலப்பாக்கும் `நாலு மணி வாலு’ என டாப் நிகழ்ச்சிகளால் ட்ரெண்டிங்கில் இருக்கிறது ஹலோ எஃப்.எம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க