சிறந்த பண்பலைத் தொகுப்பாளர் - தொகுப்பாளினி | Best RJ 2015 - Ananda Vikatan Awards | ஆனந்த விகடன் விருதுகள்
சிறந்த கதை - சிறந்த திரைக்கதை

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/02/2016)

சிறந்த பண்பலைத் தொகுப்பாளர் - தொகுப்பாளினி

சிறந்த பண்பலைத் தொகுப்பாளர்

ஆர்ஜே பாலாஜி - பிக் எஃப்.எம்

சென்னை வெள்ளத்தில் ஒலித்த நல்ல குரல் ஆர்.ஜே. பாலாஜியினுடையது. தன் பிக் எஃப்.எம் அலுவலகத்தையே நிவாரணப் பணிக்கான தலைமையகமாக மாற்றி களத்தில் இறங்கி கைகொடுத்ததோடு, போகிறபோக்கில் தென் இந்தியாவைக் கண்டுகொள்ளாத வடஇந்திய ஊடகங்களுக்கும் இரண்டு பன்ச் கொடுத்தார். தன் `டேக் இட் ஈஸி’ நிகழ்ச்சியின் மூலம் பல ஆண்டுகளாக ஊரை எல்லாம் கலாய்த்துக் காலி பண்ணினாலும், எப்போதும் ஊடுபாவாக ஒலிக்கிறது சமூகத்தின் மீதான இவரது சுளீர் விமர்சனம். வானிலை ரமணனோடு பாலாஜியின் காமெடிப் பேட்டி இந்த ஆண்டின் வைரல் வாய்ஸ் மெசேஜ். தன் ஒன்லைன் பன்ச்களால் கோடிப் பேரின் உள்ளம் கவர்ந்த இந்த ஆர்ஜே-வுக்கு ஆன்லைனில் உண்டு ஆயிரம் ரசிகர் மன்றங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க