Published:Updated:

``எல்லாத்துக்கும் அவர்தாங்க காரணம்!’’ - நேரு மீதான குற்றச்சாட்டும் மறுப்பும் #HBDNEHRU

நேரு

பாரதிய ஜனதா கட்சியும் பிரதமர் நரேந்திர மோடியும் மிகவும் கடுமையாக விமர்சித்து வரும் இந்தியாவின் முதல் பிரதமர் நேருவுக்கு இன்று பிறந்தநாள்...

``எல்லாத்துக்கும் அவர்தாங்க காரணம்!’’ - நேரு மீதான குற்றச்சாட்டும் மறுப்பும் #HBDNEHRU

பாரதிய ஜனதா கட்சியும் பிரதமர் நரேந்திர மோடியும் மிகவும் கடுமையாக விமர்சித்து வரும் இந்தியாவின் முதல் பிரதமர் நேருவுக்கு இன்று பிறந்தநாள்...

Published:Updated:
நேரு

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மறைந்து தற்போது 55 ஆண்டுகள் ஆகிவிட்டன. காங்கிரஸ் கட்சி நேருவை நினைவுகூர்கிறதோ இல்லையோ... அவரை பிரதான எதிரியாகக் கருதும் பா.ஜ.க இன்று வரை நேருவை மறக்காமல் (எதிர்மறையாக) நினைவுகூர்ந்து வருகிறது. பா.ஜ.க-வும் பிரதமர் மோடியும் யாரையாவது விமர்சிக்க வேண்டுமென்றால் அவர்களின் முதல் தேர்வு நேருவாகவே உள்ளது.

மோடி - நேரு
மோடி - நேரு

பிக்பாஸில் 'எல்லாத்துக்கும் இந்தப் பரணி பயதான் காரணம்' என்பதைப்போல ஆளும் பா.ஜ.க பல தருணங்களில் நேருவை குற்றம்சாட்டியிருக்கிறது. அவ்வாறு கடந்த சில ஆண்டுகளில் எந்த விஷயங்களுக்கெல்லாம் 'எல்லாத்துக்கும் நேருதாங்க காரணம்' என பா.ஜ.க விமர்சித்திருக்கிறது எனக் காண்போம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கர்நாடக தேர்தல் - பகத் சிங் - நேரு:

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது பிதாரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, "சுதந்திரப் போராட்டத்தின்போது பகத் சிங், சாவர்க்கர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கையில், எந்த காங்கிரஸ் தலைவர்களும் அவர்களைச் சென்று சந்திக்கவில்லை. ஆனால், இன்று ஊழல் செய்து சிறையில் உள்ளவர்களைச் சென்று சந்திக்கிறார்கள்" என காங்கிரசையும் நேருவையும் தாக்கிப் பேசினார்.

மோடி - நேரு
மோடி - நேரு

ஆனால், நேரு லாகூர் சிறைக்குச் சென்று பகத் சிங்கை சந்தித்ததையும் அதைத் தன்னுடைய சுயசரிதையில் பதிவு செய்துள்ளதையும் சமூக ஊடகங்களில் வரலாற்றாசிரியர்கள் பதிவிட்டனர்.

மசூத் அசார் - ஐ.நா - பாதுகாப்பு கவுன்சில்:

பிப்ரவரி மாதம் புல்வாமா தாக்குதல் சம்பவம் நடைபெற்ற பிறகு, ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பைச் சேர்ந்த மசூத் ஆசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சீனா முடக்கியது. அப்போது பா.ஜ.க-வினர் நேரு மீது பழி சுமத்தினர். 50-களில் நேரு பிரதமராக இருந்தபோது பாதுகாப்பு கவுன்சிலில் இணைய இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தபோது நேரு மறுத்து அதை சீனாவுக்குக் கொடுத்ததாகவும், அவ்வாறு இல்லையென்றால் தற்போது இத்தகைய பின்னடைவுகள் ஏற்பட்டிருக்காது எனவும் நேரு மீது குற்றம் சாட்டினார்.

மசூத் அசார் - ஜி ஜின்பிங்
மசூத் அசார் - ஜி ஜின்பிங்

அதற்கு காங்கிரஸ் தரப்பில், 50-களில் இந்தியாவுக்கு பாதுகாப்பு கவுன்சிலில் இணைய வாய்ப்பு கிடைத்தது உண்மைதான். ஆனால், சீனாவின் இடத்தில் இந்தியா இணைய நேரு விரும்பவில்லை என்றும், அதற்கு ஐ.நா விதிகளையே திருத்தியிருக்க வேண்டும். ஆனால், அப்போதைய சூழலில் அது சாத்தியப்பட்டிருக்காது என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டது.

காஷ்மீர் பிரச்சனை:

பா.ஜ.க காஷ்மீர் விவகாரத்தை எழுப்புகிறபோதெல்லாம் உடன் சேர்ந்து நேருவின் பெயரும் அடிபடுவது வழக்கம். கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை நீக்குவது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பிரிவு 370 என்பது நேரு செய்த மிகப்பெரிய பிழை. நேருவுக்குப் பதிலாக சர்தர் வல்லபபாய் படேல் பிரதமராக இருந்திருந்தால் காஷ்மீர் விவகாரத்தை வேறு விதமாகக் கையாண்டிருப்பார்'' என தெரிவித்தார். மேலும், ''நேரு காஷ்மீர் விவகாரத்தை ஐ.நாவுக்கு எடுத்துச் சென்றது மிகப்பெரிய தவறு" என்றும் விமர்சனம் செய்தார்.

அமித் ஷா - ஶ்ரீநாத் ராகவன்
அமித் ஷா - ஶ்ரீநாத் ராகவன்

அதற்குப் பிறகு, ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய வரலாற்றாசிரியர் ஶ்ரீநாத் ராகவன்,'' காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை அரசியலமைப்புச் சட்டத்தில் இணைத்ததில் மூளையாகச் செயல்பட்டதே படேல்தான்'' என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், காஷ்மீர் விவகாரத்தை ஐ.நாவுக்கு எடுத்துச் சென்றதன் பின்னணி குறித்தும் விரிவாக விளக்கினார்.