

சென்னை; மகாத்மா காந்தியின் 143 பிறந்த நாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா அவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் 143 வது பிறந்த நாளையொட்டி, ஜனாதிபதி , பிரதமர் மற்றும் தலைவர்கள் பலர் அவரது சமாதியில் மலரஞ்சலி செலுத்தினார். இன்று மகாத்மா காந்தியின் 143-வது பிறந்த நாள் நாடெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது.
டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான ராஜ்காட்டில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், காங். தலைவர் சோனியா உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் விடுதலை பேராட்ட தியாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.