Published:Updated:

தப்பாட்டம்...மயிலாட்டம்...ஒயிலாட்டம்... ஜெர்மன் நகரைத் தெறிக்கவிட்ட இந்திரதனுஷ் விழா! #MyVikatan

நமது நிருபர்
தப்பாட்டம்...மயிலாட்டம்...ஒயிலாட்டம்... ஜெர்மன் நகரைத் தெறிக்கவிட்ட இந்திரதனுஷ் விழா! #MyVikatan
தப்பாட்டம்...மயிலாட்டம்...ஒயிலாட்டம்... ஜெர்மன் நகரைத் தெறிக்கவிட்ட இந்திரதனுஷ் விழா! #MyVikatan

"ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க" என்ற பழமொழி, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மிகவும் பொருந்தும். ஊரிலிருக்கும் அப்பா, அம்மா, உடன் பிறப்புகள் என்று எத்தனை பேர் பசியை ஆற்றுகிறார்கள். அவர்களுக்கென்று ஒரு விழா. அதுவும் நம் இந்தியத் தூதரகம் முன்னின்று நடத்தியது என்றால் அதன் சிறப்பை என்னவென்று சொல்ல. ஃப்ராங்ஃபர்ட் நகரில் உள்ள இந்தியத் தூதரகமும் ஜெர்மனியின் எஸ்பார்ன் நகரமும் இணைந்து, கடந்த சனிக்கிழமை (11.05.2019) இந்திரதனுஷ் விழாவை ஜெர்மன் வாழ் இந்தியர்களுக்காக ஏற்பாடுசெய்திருந்தனர்.

தப்பாட்டம்...மயிலாட்டம்...ஒயிலாட்டம்... ஜெர்மன் நகரைத் தெறிக்கவிட்ட இந்திரதனுஷ் விழா! #MyVikatan

இந்திய நடனம் மற்றும் இசையை அடி நாதமாக வைத்து, "Wir Lieben das Leben" ("நாங்கள் வாழ்வை நேசிக்கிறோம்") என்ற ஸ்லோகத்தை பிரதானமாகக்கொண்டு இந்திரதனுஷ் விழா கொண்டாடப்பட்டது. 'Friends of India' குழுவைச் சேர்ந்த கமல் வரவேற்புரை வழங்க, ஃப்ராங்ஃபர்ட் நகரில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி பிரதிபா பார்க்கர் முன்னுரை வழங்கினார்.

தப்பாட்டம்...மயிலாட்டம்...ஒயிலாட்டம்... ஜெர்மன் நகரைத் தெறிக்கவிட்ட இந்திரதனுஷ் விழா! #MyVikatan

விழாவில் பேசிய பிரதிபா பார்க்கர், "இந்தியாவில் 23 மொழிகள் பேசும் பலதரப்பட்ட மக்கள், இனம், மதம் என்று வேறுபட்டாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற உயரிய மனப்பான்மையுடன் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்கிறோம். எஸ்பார்ன் (Eschborn) நகர நிர்வாகிகள், இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை நடத்த எங்களுடன் இணைந்துகொண்டதற்கு நன்றி. கதக், ஒடிசி, குச்சிப்பிடி, தமிழ்நாட்டின் பரதநாட்டியம் என்று இந்தியாவின் பிரபல நடனங்களை, அவை தோன்றிய மாநிலத்தின் பெயரையும் சேர்த்து பட்டியலிட்டதோடு, அவை அனைத்தும் உங்கள் கண்களுக்கு விருந்தாக இங்கு அரங்கேறவிருக்கின்றன" என்றார்.

தப்பாட்டம்...மயிலாட்டம்...ஒயிலாட்டம்... ஜெர்மன் நகரைத் தெறிக்கவிட்ட இந்திரதனுஷ் விழா! #MyVikatan

அவரைத் தொடர்ந்து, எஸ்பார்ன் நகர சபை முதன்மை உறுப்பினர், தாமஸ் எஃபெர்ட் பேசும் போது "இங்கு 120 நாடுகளிலிருந்து வெளிநாட்டவர்கள் வந்து வேலைசெய்கின்றனர். அவர்களுக்கு எப்போதும் பக்க பலமாய் இருப்போம்" என்றார். எஸ்பார்ன் நகர மேயர் மத்தியாஸ் கீகெர் , விடுமுறை நிமித்தம் வெளியூர் சென்றிருந்ததால் அவர் பேசிய வீடியோவை ஸ்கிரீனில் ஒளிபரப்பினார்கள். அவர் பேசும் போது, " இந்தியர்களை நாங்கள் மிகவும் முக்கியமானவர்களாகப் பார்க்கிறோம், என் ஆதரவு எப்போதும் அவர்களுக்கு உண்டு" என்றார்.

இந்திய தூதரக அதிகாரி பிரதிபா பார்க்கர் மற்றும் எஸ்பார்ன் நகர சபை முதன்மை உறுப்பினர், தாமஸ்-எபெர்ட் இருவரும் குத்துவிளக்கு ஏற்றிவைக்க, விழா ஆரம்பமானது. ஜெர்மன் பெண்மணி ஒருவர், இந்தியாவுக்கு வந்து இந்திய கலாசாரத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதுபோலவும், அவருக்கு இந்தியப் பெண்மணி ஒருவர் ஒவ்வொரு கலைநிகழ்ச்சியும் விளக்குவது போலவும் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. முதலில் சிறுவர், சிறுமியரின் யோகாசனம் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த, அடுத்தடுத்து ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் நடனங்கள் அரங்கேற, வந்திருந்த அனைவருமே உற்சாகமடைந்தனர். 

தப்பாட்டம்...மயிலாட்டம்...ஒயிலாட்டம்... ஜெர்மன் நகரைத் தெறிக்கவிட்ட இந்திரதனுஷ் விழா! #MyVikatan

தலையில் முளைப்பாரி ஏந்தி நம் தமிழ்ப் பெண்கள் மேடை ஏறிவர, அனைவருக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. அதுவரை, புரியாத பாஷையில் பாடல்களைக் கேட்ட காதுகளுக்கு, நம் தமிழ் மொழி தேனாய் தித்தித்தது. ஏழு பெண்களும் "கொட்டுங்க கொட்டுங்க கும்மிய கொட்டுங்க" என்று பாடி, நாடும் மனிதமும் வளர வேண்டும் என்றதோடு, பெண் முன்னேற்றமும் வேண்டும் என்று புதுமை பெண்களாய் கும்மிப் பாட்டுக்கு நடனமாடித் தொடங்கிவைத்தனர். அடுத்து, இரண்டு பொய்க்கால் குதிரைகள் மேடையின் கீழ் அட்டகாசமாய் ஆட்டம் போட, மேடையில் ஒயிலாட்டம் தூள் பறந்தது. ஜல்லிக்கட்டை ஞாபகப்படுத்தும் விதமாக பாடலை நடனத்தில் இணைத்தது மிகச் சிறந்த புத்திசாலித்தனம். மெரினா ஞாபகம் வந்துபோனது. புலி வேஷம் கட்டி ஆடியவர்கள் இரண்டு பேரும் தெறிக்க விட்டார்கள்.

தப்பாட்டம்...மயிலாட்டம்...ஒயிலாட்டம்... ஜெர்மன் நகரைத் தெறிக்கவிட்ட இந்திரதனுஷ் விழா! #MyVikatan

தப்பாட்டம் ஆடியவர்களின் நடனத்தில் அப்படி ஒரு நேர்த்தி. மயிலாட்டம் ஆரம்பமானதும் அரங்கமே கைதட்டலில் அதிர்ந்தது. கொடுக்கப்பட்ட 10 நிமிடங்களில் தமிழகக் கலைகளை அற்புதமாக மேடையில் அரங்கேற்றிய அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். பயிற்றுவித்த டான்ஸ் மாஸ்டர்  நாககுமாருக்கு வாழ்த்துகள். மேலும், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, " மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் அவரது சுதந்திரப் போராட்டம்" என்ற தலைப்பில் கண்காட்சியும் இடம் பெற்றிருந்தது. கைவினைப் பொருள்கள், இந்திய உணவு வகைகள் என்று கண்களுக்கும் செவிகளுக்கும் மட்டுமல்லாமல் வயிற்றுக்கும் விருந்து! மொத்தத்தில் அன்றைய நாள் ஜெர்மன் வாழ் இந்தியர்கள் அனைவருக்குமே கொண்டாட்டம்தான்.

புகைப்படம்:  சந்தோஷ் பட்டா 

செய்தி : ஜேசு ஞானராஜ்