Published:Updated:

எம்.ஜி.ஆர் பிறந்தநாள்: முதல்வர், ஜெயலலிதா உள்பட தலைவர்கள் மரியாதை!

Vikatan Correspondent
எம்.ஜி.ஆர் பிறந்தநாள்:  முதல்வர், ஜெயலலிதா உள்பட தலைவர்கள் மரியாதை!
எம்.ஜி.ஆர் பிறந்தநாள்: முதல்வர், ஜெயலலிதா உள்பட தலைவர்கள் மரியாதை!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 98வது பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 

எம்.ஜி.ஆர் பிறந்தநாள்:  முதல்வர், ஜெயலலிதா உள்பட தலைவர்கள் மரியாதை!

கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆரின் சிலை மற்றும் படத்திற்கு, முதலமைச்சர் பன்னீர் செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் எம்ஜிஆரின் திருவுருவப் படத்துக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மாலை அணித்து மரியாதை செலுத்தினார். எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்பு மலரையும் அவர் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த், எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள  எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு, சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மா. சந்திரகாசி, சென்னை தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் து.ஜெயவர்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.