Published:Updated:

“பீச்ல கோயில் தீம் வெடிங்குக்கு ஆசைப்பட்ட எனக்கு...”

திருமண கனவுகள்

படங்கள்: அசோக் அர்ஸ்

“பீச்ல கோயில் தீம் வெடிங்குக்கு ஆசைப்பட்ட எனக்கு...”

படங்கள்: அசோக் அர்ஸ்

Published:Updated:
திருமண கனவுகள்

திருமணக் கனவுகள் மிதக்கும் பெண்ணின் கண்கள் இன்னும் அழகு. கிருத்திகாவின் பேசும் கண்களும் அந்தக் கனவைக் கண்டிருக்கின்றன. கனவுகள் எல்லாம் நிறைவேறினவா... சின்னச் சின்ன மாற்றங்கள் நிகழ்ந்தனவா... அந்த மாற்றங்கள் திருமணத்தின் அழகுக்கு அழகு சேர்த்தனவா?! அவரிடமே கேட்டுப் பார்ப்போம்.

“பீச்ல கோயில் தீம் வெடிங்குக்கு ஆசைப்பட்ட எனக்கு...”

“கடற்கரையில் கோயில் தீம் செட் போட்டுக் கல்யாணம் பண்ணிக்கணும்கிறதுதான் என் ஆசை. அது அப்படியே நிறைவேறிச்சு. ஆனா, அதில் ஒரு மாற்றம். கோயில் செட் இல்லாம, கோயில்லேயே கல்யாணம் நடந்துடுச்சு’’ என்று குறும்பு கொப்பளிக்கும் குரலில் சொல்கிற கிருத்திகாவுக்கு, தன் அரேஞ்டு மேரஜ் கதைகள், சொல்ல நிறைய இருக்கின்றன.

நிச்சயதார்த்தத்தை இரு வீட்டுப் பெற்றோர்கள் மட்டும்தான் சேர்ந்து செய்திருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்த கிருத்திகாவும் கவினும் திருமணத்துக்கு ஜஸ்ட் ஒன்றரை மாதங்களுக்கு முன்னதாகத்தான் இந்தியா வந்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நானும், பீச் வெடிங் எல்லாம் நம்ம ஊரு வெயிலுக்கு செட்டாகாதுன்னு பெரிய மனசு பண்ணி, கோயில்ல கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஒப்புக்கிட்டேன்.’’

“என் வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. அதனால, அம்மாவுக்கு என் கல்யாணத்தை சத்திரம் எடுத்து கிராண்டா பண்ணணும்னு ஆசை. மாப்பிள்ளை அழைப்புல ஆரம்பிச்சு எல்லா சடங்குகளையும் செய்யணும்னு நினைச்சாங்க. ஆனா, கல்யாணம் கோயில்லதான் நடக்கணும்னு முடிவாச்சு. நானும், `சரி சரி... பீச் வெடிங் எல்லாம் நம்ம ஊரு வெயிலுக்கு செட்டாகாதுன்னு பெரிய மனசு பண்ணி, கோயில்ல கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஒப்புக்கிட்டேன்’’ என்று சிரிக்கிற கிருத்திகாவின் திருமணம், பெசன்ட் நகரில் உள்ள அறுபடை வீடு முருகன் கோயிலில் நடந்திருக்கிறது. அதாவது, அவரின் ஆசையில் 50% நிறைவேறும் வகையில் கடற்கரையில் நடந்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“கோயிலுக்குள் கோயில் தீம் ரெடி பண்ணியிருந்தாங்க. ஒரு குடத்துக்குள்ளே இருந்து பூக்கள் அருவியா கொட்டுற மாதிரி, பூக்கோலங்களுக்கு நடுவுல குத்து விளக்குகள் நிக்கிற மாதிரி, நான் கோயிலுக்குள்ள என்ட்ரியானப்ப ஒரு பூப்பந்தலுக்குள்ள நடந்து வர்ற மாதிரின்னு செட் போட்டிருந்தாங்க. திருமணம் நடந்த கோயில் மண்டபத்தைப் பூக்களால் அழகா அலங்கரிச்சிருந்தாங்க. தவிர, அன்னிக்கு அந்தக் கோயில்ல எங்க கல்யாணம் மட்டும்தான் நடந்துச்சு. அதனால, பிரைவஸி கிடைச்சது.

“பீச்ல கோயில் தீம் வெடிங்குக்கு ஆசைப்பட்ட எனக்கு...”

கல்யாணத்துக்கு 200 பேர்கிட்டே வருவாங்கன்னுதான் எதிர்பார்த்தோம். ஆனா, 500 பேருக்கு மேலே வந்துட்டாங்க. ஸோ, வந்தவங்களை அழைக்க, விசாரிக்க, சாப்பிட அனுப்பறது மாதிரியான விருந்தோம்பல் விஷயங்கள்ல ரொம்ப கவனமா இருந்தோம். ஏன்னா, கோயிலுக்கு வந்தாங்களா, கல்யாணத்துக்கு வந்தாங்களான்னு தெரியாம போயிடும் இல்லையா’’ என்றவர் தன் புடவை ஷாப்பிங் களேபரத்தைக் கலகலப்பாக விவரிக்க ஆரம்பித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“பீச்ல கோயில் தீம் வெடிங்குக்கு ஆசைப்பட்ட எனக்கு...”

“மொத்த ஷாப்பிங்குக்கும் நானும் கவினும் ஒண்ணாதான் கடை கடையா ஏறி இறங்கினோம். கல்யாணத்துக்கு சில்வர் ஜரி வெச்ச பட்டுப்புடவை எடுத்துட்டு, அதுக்கு மேட்சா ஸ்டோன் செட் நகை போட்டுக்கணும்னு நினைச்சேன். ஆனா என் மேக்கப் ஆர்ட்டிஸ்ட், ‘கல்யாணப் பட்டுக்கும் முகூர்த்தப் புடவைக்கும் ஒரே நகை செட்தான் அணிய முடியும். மாற்றுவதற்கு நேரம் இருக்காது. முகூர்த்தப் புடவை கட்டம் போட்ட சிவப்பு நிற காட்டன் புடவை. அதுக்கு கோல்டன் செட் நகைதான் போடணும். அதுக்கேத்த மாதிரி கல்யாணப் புடவையையும் செலக்ட் பண்ணிடு’ன்னு சொல்லிட்டாங்க. ஜரியே இல்லாத பர்பிள் கலர் பட்டுப்புடவை எடுத்தேன். ‘கல்யாணத்துக்கு ஜரியில்லாம பட்டுப்புடவையா’ன்னு எல்லோரும் கேட்டாங்க. புடவை கட்டி நகையெல்லாம் போட்டதுக்கு அப்புறம் செம டிரெஷனலா ஃபீல் பண்ணினேன்.

“பீச்ல கோயில் தீம் வெடிங்குக்கு ஆசைப்பட்ட எனக்கு...”

ரிசப்ஷனுக்கான டிரஸ் சென்னையில எதுவும் செட்டாகலை. கடைசியா அதை ஹைதராபாத்துல எடுத்தேன். பத்து நாள் கடைவீதியில அலைஞ்சு திரிஞ்சு அந்த கவுனை வாங்கினேன். ஆனா, கவினுக்கு சென்னையில ஒரே நாள்ல, ஒரே கடையில ஷெர்வானி செட்டாகிடுச்சு’’ - சொல்லும்போதே தன் ஷாப்பிங் அட்ராசிட்டியை நினைத்து குலுங்கிக் குலுங்கிச் சிரித்த கிருத்திகா, “திருமணத்தில் நாம எதிர்பார்த்த தருணங்கள் அப்படியே நிகழ்ந்தா, அதையெல்லாம் நினைச்சு நினைச்சு மகிழ்வோம். ஒருவேளை நாம நெனச்சதுக்கு மாறா நடந்து சொதப்பியிருந்தா, அதுக்காக வருத்தப்படத் தேவையில்ல. ஆயுளுக்கும் அதையெல்லாம் சொல்லிச் சொல்லிச் சிரிச்சுக்கலாம். அதனால, கூல்!” - கூலாகச் சொல்கிறார் கிருத்திகா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism