Published:Updated:

ராம நாராயணன் சினிமாவின் யூனிவர்சிட்டி..! - பாராட்டிய ரஜினி

ராம நாராயணன் சினிமாவின் யூனிவர்சிட்டி..! - பாராட்டிய ரஜினி
ராம நாராயணன் சினிமாவின் யூனிவர்சிட்டி..! - பாராட்டிய ரஜினி

ராம நாராயணன் சினிமாவின் யூனிவர்சிட்டி..! - பாராட்டிய ரஜினி

1974-ல் ராம நாராயணனும், எம்.ஏ.காஜாவும் இணைந்து 'ராம் ரஹீம்’ என்ற புனைபெயரில் நாடகத்துக்கு கதை வழங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது இருவருக்கும் சினிமா மோகம் தொற்றிக் கொன்டது. திரைப்பட  படப்பிடிப்பு நடக்கும் இடங்களை தேடி அலைந்தனர். சங்கரன் இயக்கிக் கொண்டிருந்த 'ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ படப்பிடிபுக்கு சென்றார். நாராயணனைப் பார்த்த அந்தப்பட புரொடக்ஷன் மேனேஜர் துரை, படப்பிடிப்பை பார்க்க அனுமதி கொடுத்ததோடு நிற்காமல் சினிமா உலகம் பற்றிய நெளிவு, சுழிவுகளை சொல்லிக் கொடுத்தார். ராம நாராயணன் இயக்கிய முதல் படம் 'சுமை’ முதல் கடைசியின் எடுத்த 128-வது படமான 'ஆர்யா சூர்யா’வரை  அவரது எல்லா படங்களுக்கும் புரொடக்ஷன் மேனேஜர் 'ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ துரைதான். இடையில் துரையை 'கரகாட்டக்காரன்’ படத்தின் இணை தயாரிப்பாளராக்கி அழகு பார்த்தார்.
ராம நாராயணன் சினிமாவின் யூனிவர்சிட்டி..! - பாராட்டிய ரஜினி
மும்மூர்த்திகள்_
வி.சி.குகநாதன் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அவரிடம் சினிமா சான்ஸ் கேட்க இவரை அழைத்து போனவர் பி.ஆர்.ஓ கிளாமர் கிருஷ்ணமூர்த்தி அதன்பின் கிருஷ்ணமூர்த்தி இறக்கும்வரை இவரது எல்லா படங்களுக்கும் பிஆர்ஓ-வாக கிருஷ்ணமூர்த்திதான் பணியாற்றினார். பின்னாளில் தனது தேனான்டாள் பிலிம்ஸில் குகநாதனுக்கு டைரக்ஷன் செய்யும் வாய்ப்பைக் கொடுத்தார். அப்படி உருவானதுதான் பாண்டியராஜன், குஷ்பு நடித்த 'மனைவிக்கு மரியாதை’ திரைப்படம். ராம நாராயணன், ராஜசேகர், காஜா மூன்றுபேரும் நெருங்கிய நண்ப்பர்கள். மூவரும் இணைந்து கதை ராம நாராயணன், வசனம் ராஜசேகர், திரைக்கதை டைரக்ஷன் எம்.ஏ.காஜா என்று டைட்டிலில் போட்டு 'மாந்தோப்புக் கிளியே’, 'பௌர்ணமி நிலவில்’, 'செல்லக்கிளி’ படங்களை உருவாக்கினர்.
கருணாநிதி வீட்டு அறங்காவலர்_    
கருணாநிதி குடும்பத்தில் மு.க.முத்து, அறிவுநிதி, தயாளு அம்மாள், அழகிரி, ஸ்டாலின், உதயநிதி, ராஜாத்தி, கனிமொழி, கலாநிதி, தயாநிதி என்று எல்லோரிடமும் பாரபட்சம் இல்லாமல் நெருக்கமாக பழக்கம் கொண்டவர். ஒருவர்பற்றி இன்னொருவர் சொல்லும் குறைகளை மற்றவர்கள் காதில் போடாத பண்பாளர். தனது கோபாலபுர இல்லத்தை மருத்துவமனைக்காக 2010-ம் ஆண்டு தானமாக கொடுத்தார் கருணாநிதி. அந்த மருத்துமனைக்காக அமைத்த 'அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை’யின் அறங்காவலர்கள் ஐந்து நபரில் ஒருவராக ராம நாராயணனை நியகித்து இருந்தார், கருணாநிதி!
ரஜினி சொன்ன கருத்து_
கடந்த தி.மு.க ஆட்சியில் கருணாநிதிக்கு 'பாசக்கார தலைவனுக்கு பாராட்டு விழா’ நிகழ்ச்சியை தமிழ் திரைப்பட உலகம் நடத்தியது அப்போது விழா அழைப்பிதழ் கொடுப்பதற்காக ராம நாராயணன், 'சிவசக்தி’ பாண்டியன் ரஜினி வீட்டுக்கு சென்றனர். பாண்டியனுக்கு ஏற்கெனவே ரஜினி நல்ல பழக்கம். ரஜினியிடம் ராம நாராயணனை அறிமுகம் செய்தார் பாண்டியன் அப்போது பதறிப்போன ரஜினி, ''பாண்டியன் நீங்க எனக்கு நாராயணன் சாரை அறிமுகப்படுத்துறீங்களா? எனக்கு ஏற்கெனவே அவரைப்பத்தி நல்லாத் தெரியும் அவர் சினிமாவோட யூனிவர்சிட்டி'' என்று பாண்டியனை மடக்கினார், ரஜினி. ராம நாராயணன் காரில் ஏறும்வரை வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார், ரஜினி.
வைரமுத்துவுக்கே வைப்ரேஷன்_
பக்தி மார்க்கத்தில் பாதையை அமைத்துக் கொண்டாலும் கம்யூனிஸ சிந்தனை அவருக்கு எப்போதும் உண்டு. பழைய பாடலை கேட்டால் யார் பாடலாசிரியர் என்பதை சரியா கணித்து ஆச்சர்யபடவைப்பார். கவிஞர் வைரமுத்துவுக்கும், ஏவி.எம். சரவணனுக்கும் இப்போது இருக்கும் நெருக்கம் எல்லோருக்கும் தெரிந்த சங்கத்தி. 'நிழல்கள்’ படத்தில் வைரமுத்து பாடல் எழுதிய தருணத்தில் வைரமுத்து எழுதிய கவிதைகள்மீது இவருக்கு ஈர்ப்பு வந்தது. அதன் எதிரொலியாக 'சிவப்பு மல்லி’ படத்துக்கு பாட்டு எழுதவைத்தார். அப்படி பிறந்ததுதான் 'எரிமலை எப்படி பொறுக்கும்  நெருப்புக்கு இன்னுமா உறக்கம்’ சிங்க கூட்டம் நிமிர்ந்தால் சிறையின் கதவு தெறிக்கும்’ பாடல். வாரத்தில் தவறாமல் நான்கு நாட்கள் இவரிடம் வைரமுத்து பேசுவார். ''உங்களிடம் பேசும்போது எனக்கு பாஸிட்டிவ்வான வைப்ரேஷன் கிடைக்கிறது'' என்று சொல்லி வைரமுத்து புளகித்து போவார்.
வருஷத்துக்கு 12 படங்கள்_
இன்று ஒரே படத்தை 3-வருஷம் என்று சூயிங்மாய் இழுத்து எடுக்கிறார்கள். 1984-ம் வருஷத்தில் மட்டும் 12 படங்களை எடுத்து இருக்கிறார். அடுத்த வருஷம் 16 படங்களை எடுத்து இந்திய சினிமாவை ஆச்சர்யமாக்கினார். அவரது நூறாவது படமான 'திருப்பதி ஏழுமலை வெங்க டேசா’ படத்தின் பாடல் காட்சி ஏவி.எம்மில் நடந்தபோது சந்தித்தேன். அப்போது '' படத்தையே 20-நாள்ல முடிச்சுட்டேன். இவங்க ஒரு பாட்டை நாலு நாளா இழுத்துக்கிட்டே இருக்காங்க...'' என்று அசால்ட்டாய் சொல்லி அதிரவைத்தார்.  
- எம். குணா
அடுத்த கட்டுரைக்கு