Published:Updated:

ஏ.ஆர்.ரஹ்மானின் மிஸ் பண்ணக் கூடாத 10 ஆல்பங்கள்!

ஏ.ஆர்.ரஹ்மானின் மிஸ் பண்ணக் கூடாத 10 ஆல்பங்கள்!
ஏ.ஆர்.ரஹ்மானின் மிஸ் பண்ணக் கூடாத 10 ஆல்பங்கள்!

ஏ.ஆர்.ரஹ்மானின் மிஸ் பண்ணக் கூடாத 10 ஆல்பங்கள்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாள் இந்திய அளவில் டிரெண்டாகி இருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, வரலாற்றில் சிறந்த இசையமைப்பாளர்கள் லிஸ்ட் எடுத்தால் அதில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மதிப்பான இடம் உண்டு. தமிழில் ரஹ்மான் இசையில் வெளிவந்த தவிர்க்கவே முடியாத பத்து ஆல்பங்கள் பற்றிய ஒரு ரஹ்மான் ரசிகனின் பார்வை இங்கே.

1. ரோஜா(1992) : -

மணிரத்னம் அதற்கு முன் இயக்கிய அனைத்து படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர். அவர்கள் இருவருக்கும் இடையே சின்ன அபிப்ராய பேதம் உண்டானபோது, 23 வயது ரஹ்மானை ரோஜாவுக்கு இசையமைப்பாளராக்கினார் மணிரத்னம். ரோஜா படத்துக்கு ரஹ்மான் தான் இசையமைப்பாளர் என்ற அறிவிப்பு வெளியானதும் இந்தியாவே புருவம் உயர்த்தியது. முதல் படத்திலேயே எதிர்பார்ப்பு எகிறியடித்தாலும், அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் தாண்டி, அதுக்கும் மேல, அதுக்கும் மேல என அட்டகாசமான ஒரு ஆல்பம் கொடுத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆல்பம் விற்பனையில் புதிய சாதனை படைத்தது ரோஜா திரைப்படம். 

தமிழா, தமிழா பாட்டை கேட்டு இந்தியாவே உருகியது, புது வெள்ளை மழை, சின்ன சின்ன ஆசை பாட்டுகள் ஆல்டைம் க்ளாஸிக்ஸ்.

முதல் படத்திலேயே தேசிய விருதையும் அள்ளினார் ரஹ்மான்.

ஏ.ஆர்.ரஹ்மானின் மிஸ் பண்ணக் கூடாத 10 ஆல்பங்கள்!

2. கிழக்கு சீமையிலே(1993) : -

ஏ.ஆர். ரஹ்மான் வெஸ்டர்ன் டைப் இசையமைப்பாளர், அவருக்கு மண் வாசனை சார்ந்த கிராமியப்  படங்களுக்கு இசையமைக்கத்   தெரியாது போன்ற விமர்சனங்களுக்கு, ரஹ்மான் தனது இசையால் பதிலடி கொடுத்த ஆல்பம். இந்தப் படம் பெருவெற்றிபெற ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கும் பெரும் பங்கு உண்டு. 'தென்கிழக்கு சீமையில', 'கத்தால காட்டு வழி', ஆத்தங்கரை மரமே... அரசமர இலையே, 'மானூத்து மந்தையில' என ஒவ்வொரு பாடல்களும் இன்றும் தமிழகக் கிராமங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும். ஒரே படத்தில் சிட்டி-பட்டி என எங்கெங்கும் அதிர்வுகளை உண்டாக்கினார் ரஹ்மான்.

ஏ.ஆர்.ரஹ்மானின் மிஸ் பண்ணக் கூடாத 10 ஆல்பங்கள்!

3. மின்சார கனவு(1997) : -

நீங்க என்ன எதிர்பார்த்தாலும் நான் வேற வேற...’ என சொல்லாமல் சொன்னார் ரஹ்மான் இந்த ஆல்பம் மூலம். 'அன்பென்ற மழையிலே' பாடல் தெய்வீக உணர்வை உண்டாக்கியது. 'பூப்பூக்கும் ஓசை', 'தங்கத்தாமரை மகளே', 'மானா மதுரை', 'வெண்ணிலவே வெண்ணிலவே', 'ஸ்ட்ராபெர்ரி கண்ணே' என ஆல்பத்தின் அத்தனை பாடல்களும் மெகா ஹிட். இதன் இந்தி வெர்ஷனும் செம ஹிட்.இந்த படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றார். தங்கத்தாமரை பாடல் பாடிய எஸ்.பி.பி,  'ஊ..ல..ல்லா மானா மதுரை' பாடலை பாடிய சித்ரா ஆகியோருக்கும் தேசிய விருது கிடைத்தது. வெண்ணிலவே, ஸ்ட்ராபெர்ரி கண்ணே ஆகிய பாடல்களுக்கு நடன இயக்குனராக பிரபுதேவாவும் தேசிய விருது வென்றனர்.

4. உயிரே(1998) : -

மணிரத்னம், ரஹ்மான் கூட்டணியின் அடுத்த சூப்பர் டூப்பர் ஹிட். 'பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாக தேடிப் பார்த்தேன்' என காதல் ஜோடிகள் உருகி மருகி பாடினர். குத்தாட்டம் போட வைத்தது 'தையதைய தையா' பாடல். ஜானகி பாடிய  'நெஞ்சினிலே..நெஞ்சினிலே', ரஹ்மானே இசையமைத்து பாடிய 'சந்தோஷ கண்ணீரே', ஸ்ரீனிவாஸ், சுஜாதா கூட்டணி பாடிய ''என் உயிரே, என் உயிரே'' ஆகிய எல்லா பாடல்களும் ரேடியோவிலும், வாக்மேனிலும் ரிப்பீட் மோடில் இருந்தன. ஒன்ஸ்மோர், ஒன்ஸ்மோர் என இப்படத்தின் பாடல்களை இன்றும் மொபைலில் டிரெண்டிங் அடிக்கும். பாலிவுட் இசையமைப்பாளர்கள் 'யாருப்பா இவரு' என ஒட்டுமொத்தமாக திரும்பிபார்த்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் மிஸ் பண்ணக் கூடாத 10 ஆல்பங்கள்!

5. அலைபாயுதே(2000) :-

மணிரத்னம்+ரஹ்மான்+வைரமுத்து கூட்டணியின் மெஸ்மரிச மேஜிக் இந்தப் படத்திலும் வொர்க்-அவுட் ஆனது. ’ரஹ்மான் ஒரு தொழில்முறை இசையமைப்பாளர், அவருக்கு கர்னாட சங்கீத நேர்த்தி கைவராது’ என விமர்சித்தனர் பலர். அவர்களுக்கு 'அலைபாயுதே கண்ணா...' பாடலில் பதிலடி கொடுத்தார் ரஹ்மான். 'மாங்கல்யம் தந்துனானே', பச்சை நிறமே, சிநேகிதனே, காதல் சடுகுடு என ஒட்டுமொத்த ஆல்பமும் லவ் டிலைட். காதல் தோல்விக்கு இன்றும் 'எவனோ ஒருவன்' பாடலைத்தான் டெடிகேட் செய்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானின் மிஸ் பண்ணக் கூடாத 10 ஆல்பங்கள்!

6. கன்னத்தில் முத்தமிட்டால்(2002) : -

மணிரத்னம் ஈழப் பிரச்னை தொட்டு இயக்கிய படம். அதற்கு ரஹ்மான் இசை சர்வதே டச் கொடுத்தது. 'விடை கொடு எங்கள் நாடே', 'வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே' ஆகிய பாடல்கள் ஹிட் என்பதையும் தாண்டி, ஈழ மக்களுக்கு இசை ஆறுதல் கொடுத்தது. ஆறு தேசிய விருதுகளை அள்ளியது இத்திரைப்படம். அதில் சிறந்த இசையமைப்பாளர் விருது வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஏ.ஆர்.ரஹ்மானின் மிஸ் பண்ணக் கூடாத 10 ஆல்பங்கள்!

7.சக்கரக்கட்டி (2008) : -

ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால், ரஹ்மான் இசையில் முற்றிலும் ஃப்ரெஷ் டிரீட்மென்டில் வந்த ஆல்பம் இது. படம் சொல்லிக் கொள்ளுமளவுக்குப் போகவில்லையென்றாலும், பாடல்கள் எப்.எஃம்.மில் மாஸ் ஹிட், மரண தெறி. இப்போதும் டிரெண்டியாக இருக்கும் 'டாக்சி,டாக்சி', 'சின்னம்மா', 'மிஸ் யூ..மிஸ் யூ டா', 'மருதாணி' பாடல்கள் அந்த ஆல்பத்தின் கலெக்‌ஷன்கள். ரஹ்மான் ஹிட் பாடல்கள் கொடுத்தும் அடி வாங்கிய படங்கள் பட்டியல் சற்றே பெரியதுதான். அதில் இந்தப் படத்துக்கு பிரதான இடமுண்டு!

ஏ.ஆர்.ரஹ்மானின் மிஸ் பண்ணக் கூடாத 10 ஆல்பங்கள்!

8. விண்ணைத்தாண்டி வருவாயா (2009) : -

2000-த்துக்குப் பிறகு இந்தியிலும், ஹாலிவுட் படங்களிலும் ரஹ்மான் அதிக கவனம் செலுத்தியதால், தமிழில் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' இசை ஆல்பங்கள் வரவில்லை. அந்தக் குறையை போக்கியது விண்ணைத்தாண்டி வருவாயா. மணிரத்னத்துக்கு இளையராஜா போல, இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு  ஹாரிஸ் ஜெயராஜ். ஹாரிசை விட்டு பிரிந்தவுடன் ரஹ்மானுடன் கை கோர்த்தார் கவுதம் மேனன்.  'ஹோசன்னா', 'மன்னிப்பாயா', 'ஆரோமலே', 'ஓமனப்பெண்ணே', 'கண்ணுக்குள் கண்ணை', 'அன்பில் அவன்' என ஒட்டுமொத்த ஆல்பமும் க்ளாஸிக் ஹிட். ஐ டியூன்ஸில் முதல் இடம் பிடித்தது விடிவி. 'நியூ ஏஜ் டிரெண்டு' பிடித்து தான் எப்போதும் டிரெண்ட் செட்டர்தான் என்பதை நிரூபித்தார் ரஹ்மான்!

ஏ.ஆர்.ரஹ்மானின் மிஸ் பண்ணக் கூடாத 10 ஆல்பங்கள்!

9. எந்திரன் (2010) : -

சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களுக்கு இசையமைப்பது சாதாரண விஷயம் கிடையாது. 'ரோபோ - காதல்' என்ற கான்செப்டில் வந்த எந்திரன் படத்தில், முதல் காட்சியிலேயே, வசீகரன் ரஜினி, ஒரு ரோபோவை உருவாக்கும் போது, 'புதிய மனிதா பூமிக்கு வா' என்ற பாடலை மெல்லிய இசையில் ஓடவிட்டு, கருவறையில் ஒரு குழந்தை பிறக்கும் உணர்வை பார்வையாளர்களுக்கு கடத்தியிருப்பார் ரஹ்மான். 'பூம்பூம் ரோபோ டா', 'காதல் அணுக்கள்', 'கிளிமஞ்சாரோ', 'அரிமா,அரிமா' என எல்லா பாடல்களும் டெரா பைட் ஹிட். அதிலும் 'இரும்பிலே ஒரு இதயம்' பாடல் எகிறி அடித்தது. ஷங்கர், ரஹ்மான் கூட்டணியின் பெஸ்ட் ஆல்பம் பட்டியலில் எந்திரனுக்கு டாப் இடமுண்டு!

ஏ.ஆர்.ரஹ்மானின் மிஸ் பண்ணக் கூடாத 10 ஆல்பங்கள்!

10. ஓ காதல் கண்மணி (2015) : -

ஃபேஸ்புக், டிவிட்டரையும் தாண்டி இன்ஸ்டாகிராம் ஹிட்டடித்து கொண்டிருந்த காலம். ஜாம்பவான் இசையமைப்பளர்களை தாண்டி அனிருத், சந்தோஷ் நாராயணன் என அடுத்தகட்ட இசையமைப்பாளர்கள் கவனம் ஈர்த்து கொண்டிருந்தார்கள், இனி அனிருத் பாணி 'கொலவெறி' வைரல்யுகம் இனி ரஹ்மான் தாக்குப்பிடிப்பது கஷ்டம் என மீண்டும் சிலர் சீண்ட, மன மன மெண்டல் மனதில் என ஒரே டீசரில் விமர்சனங்களை காலி செய்தார். 'காரா ஆட்டக்காரா', 'பறந்து செல்லவா', 'மெண்டல் மனதில்' ஆகிய பாடல்களில் டிரெண்டி டிரீட்மென்ட் கொடுத்தவர்,  தனக்கே உரிய பாணியில் 'தீரா உலா'  பாடலில் தனது ரசிகர்களை கட்டிப்போட்டார். மலர்கள் கேட்டேன், நானே வருகிறேன் பாடல்களில்  எட்டில் இருந்து எண்பது வரை உள்ள அத்தனை பேரையும் வசீகரித்தார்.

இதோ இந்த 2016 புத்தாண்டில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் 'தள்ளி போகாதே' என்ற சிறிய பாடல் டீசரில் மீண்டும் வைரலாகிவிட்டார் ரஹ்மான். ஆடியோ கேசட் காலத்தில் துவங்கி வைரல் யுகம் வரை 25 ஆண்டுகளாக நம்பர் 1 அந்தஸ்தில்  இருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. ரஹ்மான் மென்மேலும் பல உயரம் தொட நம் வாழ்த்துக்களை பகிர்வோம்!

-பு.விவேக் ஆனந்த்

குறிப்பு: உங்களுக்குப் பிடித்த ரஹ்மான் ஆல்பம் பற்றி கமெண்ட்டில் பதியலாம்!

அடுத்த கட்டுரைக்கு