Published:Updated:

இந்த கேரக்டர்களில் ரஜினி நடிச்சிருந்தா.. வேற வேற வேற லெவலா இருந்திருக்கும்ல!

இந்த கேரக்டர்களில் ரஜினி நடிச்சிருந்தா.. வேற வேற வேற லெவலா இருந்திருக்கும்ல!
இந்த கேரக்டர்களில் ரஜினி நடிச்சிருந்தா.. வேற வேற வேற லெவலா இருந்திருக்கும்ல!

இந்த கேரக்டர்களில் ரஜினி நடிச்சிருந்தா.. வேற வேற வேற லெவலா இருந்திருக்கும்ல!

''அடடா! என்னா நடிப்புய்யா... முள்ளும் மலரும் ரஜினியை பார்த்த மாதிரியே இருக்கு, 'கபாலிடா!' டயலாக் சொல்றப்போ பாட்ஷா ரஜினியை பார்த்த மாதிரியே இருக்கு'' - படம் பார்த்த பலர் சொன்னது இது. ரஜினி தன் வழக்கமான பார்முலா படங்களை தவிர்த்துவிட்டு நடித்ததுதான் இப்படி குவியும் பாராட்டுகளுக்கு எல்லாம் முக்கிய காரணம். ரஜினி இதற்கு முன்னால் இப்படி எந்தந்த படங்களில் நடித்திருந்தால் செமையாக இருந்திருக்கும் என்ற ஜாலியான கற்பனைதான் இது. ஸோ, பி.பி எகிறாம படிங்க.

முதல்வன்:

இந்தப் படத்துல முதல்ல நடிக்க இருந்தது ரஜினிதான்னு ஒரு தகவல் உண்டு. அப்புறம் இளைய தளபதி, கடைசியா அர்ஜூன். நிஜத்துல ஏற்கெனவே சூப்பர் ஹிட்டான இந்தப் படம் சூப்பர்ஸ்டார் நடிச்சுருந்தா 'செவ்வாய் கிரக' லெவல் ஹிட் ஆயிருக்கும். பாட்ஷா பட மோதலை இந்தப் படத்துல தொடர்ந்திருக்கலாம். இன்டர்வியூ சீன் 'தெறி பேபி'தான். குறிப்பா, ஒரு மாற்றுத்திறனாளி வந்து, ''அரசியலுக்கு வா தலைவா''னு கூப்பிட்டதும் உணர்ச்சிவசப்பட்டு சீமான் ஸ்டைல்ல கை ஓங்குற சீனுக்கு தமிழ்நாடு சிலிர்த்து எழுந்து சில்லறைய சிதற விட்டிருக்கும். என்ன ஒண்ணு, அர்ஜூன் நடிச்சே ரிலீஸாக அவ்ளோ கஷ்டப்பட்ட படம் அது. சூப்பர்ஸ்டார் நடிச்சுருந்தா கேக்கவே வேணாம்.

ஜிகிர்தண்டா:

இதுவும் சூப்பர்ஸ்டார் பண்ண ஆசைப்பட்ட படம்தான். படம் பார்த்துவிட்டு கார்த்திக் சுப்புராஜிடம் ரஜினி, பாபி சிம்ஹா கேரக்டரைப் பாராட்ட ’உங்களை நெனைச்சுதான் அந்த கேரக்டர் எழுதினேன்’ என்றாராம். ‘அப்ப என்கிட்டயே சொல்லிருக்கலாமே’ என்று சிரித்திருக்கிறார் ரஜினி.  'அசால்ட் சேது' கேரக்டர்ல பாபி சிம்ஹா சிக்ஸர் அடிக்கிறப்போ ரஜினி செஞ்சுரியே அடிப்பாரே. சிகப்பு கலர் கார்ல ரெட்ரோ லுக்குல ரஜினி கெத்து காட்டுற சீன்களுக்கு தியேட்டரே அலறி அடங்கியிருக்கும். இப்போ 'நெருப்புடா' மாதிரி அப்போ சந்தோஷ் சூப்பர்ஸ்டாருக்காக போட்ட ஸ்பெஷல் பி.ஜி.எம் ஏதாவது வைரலாகி இருக்கும். என்ன க்ளைமாக்ஸ்ல பாபியை காமெடி பீஸாக்கி இருப்பார் டைரக்டர். அது தலைவருக்கு செட்டாகுமாங்கிறதுதான் உலகமகா டவுட்டு.

ஆய்த எழுத்து:

இந்தப் படத்தோட ரொம்பப் பெரிய பிளஸ் பாரதிராஜா. நக்கலும் முறைப்புமா அவர் பண்ற வில்லத்தனம் 'வாவ் ' ரகம். ரஜினி படம் முழுக்க வில்லன் கேரக்டர்ல நடிச்சு எத்தனை வருஷமாச்சு? அவர் மட்டும் இந்தப் படத்துல நடிச்சுருந்தா இன்னொரு மைல்ஸ்டோன் சினிமா ஆயிருக்கும். ''என்ன வேணும்? கேளு கேளு'' - ''எடுத்துக்கோ, எல்லாத்தையும் எடுத்துக்கோ''. ரெண்டு பேரோட வசனங்கள் கூட எவ்ளோ பொருந்தது. சூப்பர் ஜி சூப்பர் ஜி!

அரங்கேற்ற வேளை:

என்னது லிஸ்ட்ல இந்தப் படமான்னு நெனைப்பீங்க. ஆமா..கொஞ்சம் பழைய படம்தான். பிரபு, ரேவதி, வி.கே ராமசாமி, ஜனகராஜ்னு எல்லாரும் சேர்ந்து ஜாலி கோலி ஆடுன ஏரியா. இப்போ பார்த்தாலும் கண்ணுல தண்ணி வர வைக்குற அளவுக்கு காமெடி சீன்கள் இருக்குற படம். தில்லுமுல்லுக்கு பிறகு லைட் ஹார்ட்டட் காமெடி படமே ரஜினி பண்ணலைங்குறது பலருக்கு இருக்கற வருத்தம். தம்பிக்கு எந்த ஊருல கொஞ்சம் காமெடி இருக்கு. அப்பறம் காமெடி பிரதானமா ஒரு படம் அவர் பண்ணினாரா என்ன? ஒருவேளை  அரங்கேற்றவேளைல நடிச்சிருந்தா  வி.கே ராமசாமிகூட, ரஜினி வர்ற சீனெல்லாம் 'அல்ட்டி' காமெடியா இருந்திருக்கும். மிஸ் ஆகிடுச்சே!

சூது கவ்வும்:

பிளாக் காமெடி வகை படங்கள் தமிழுக்கே புதுசு. ஸோ, ரஜினி அந்த ஜானர்ல நடிக்க வாய்ப்பே இல்லாம போயிடுச்சு. ஒருவேளை 'சூது கவ்வும்'ல தலைவர் நடிச்சிருந்தா? கபாலிக்கு முன்னாலேயே வயசான கெட்டப்ல நடிக்கிறார்னு பாராட்டுகள் குவிஞ்சிருக்கும். போலீஸ் கெட்டப் போட்டு அடியாட்களை மிரட்ட இறங்கி வந்து மீசையை முறுக்குற சீன்ல... யோசிக்கவே புல்லரிக்குது. இப்போ வர்றதை விட பலமடங்கு பாராட்டு அப்போவே வந்திருக்கும்.

பண்ணையாரும் பத்மினியும்:

கபாலி படம் பாத்த எல்லாருக்கும் பிடிச்ச சீக்வென்ஸ் ரஜினி - ராதிகா ஆப்தே வர்றதுதான். அதுலயும் 'மாயநதி' பாட்டுல காதலும், குறும்புமா அவர் பண்ற சேட்டைகளுக்கு கோடி லைக்ஸ். 'பண்ணையாரும் பத்மினியும்' படத்துல பண்ணையாருக்கும், அவர் மனைவி செல்லம்மாவுக்கும் நடுவுல அவ்ளோ ரொமான்ஸ் இருக்கும். அதுல இதே ஜோடி நடிச்சிருந்தா? சண்டையே இல்லாம, சின்ன சின்ன சோக சீன்கள், நிறைய நெகிழ்ச்சிகள்னு அந்த படம் க்ளாசிக் சினிமாவாகி 'மகிழ்ச்சி'ப்படுத்தியிருக்கும்.

மெளனகுரு:

கெட்ட போலீஸ் வேஷத்துல நம்ம ஹீரோக்கள் நடிச்சா படம் சூப்பர்ஹிட்டாகும்கறது கோலிவுட் விதி. முரட்டு, கெட்ட போலீஸா மெளனகுரு படத்துல, ஜான்விஜய் கேரக்டர்ல ரஜினி நடிச்சிருந்தா? அருள்நிதியை கார்னர் பண்ணி டார்ச்சர் பண்ற சீனெல்லாம் வேற லெவல் வில்லத்தனமாகி இருக்கும். இந்தியில, மெளனகுரு ரீமேக் 'அகிரா' ட்ரெய்லர்ல அனுராக் காஷ்யப் செம மிரட்டலா இருப்பார். சூப்பர் ஸ்டார் பண்ணிருந்தா மாஸ் மிரட்டல்.

பாபநாசம்:

மல்லுவுட்டில் மோகன்லாலும், இங்கே உலக நாயகனும் பின்னிப் பெடலெடுத்த படம். ரஜினி, படம் முழுக்க அமைதியான குடும்பத்தலைவரா வர்றதை பார்க்கவே எக்கச்சக்க கண்கள் வேணும். கோபமும், ஆதங்கமும், வீராப்புமா சூப்பர்ஸ்டார் நடிச்சிருந்தா வேற ஃப்ளேவர்ல படம் செமையா வந்திருக்கும். அதுவும், பிணம் இருக்குறதா போலீஸ் தோண்டி பார்த்து ஏமாறும்போது கமல் செம நக்கலா ஒரு ரியாக்‌ஷன் விடுவாரே! அதை சூப்பர்ஸ்டார் முகத்துல பார்க்க...வாட் எ பீல்!

பஸ் கண்டக்டர்ல இருந்து கபாலி வரை தன் க்ராஃபை ஏத்திகிட்டே இருக்கற ரஜினி, ’இதுல நடிச்சிருக்கலாமே’ன்னு நாம நினைக்கற  படங்கள், இன்னும் சில இந்த லிஸ்ட்ல இருக்கு. உங்க பங்குக்கு நீங்களும் லிஸ்ட் போடுங்க! காசா பணமா? கற்பனைதானே! என்ஜாய்!

அடுத்த கட்டுரைக்கு