Published:Updated:

சென்னை மாடல் டூ ஆந்திரா மருமகள்...! சமந்தாவின் பியூட்டி கிராப் #HBDSamantha

சென்னை மாடல் டூ ஆந்திரா மருமகள்...! சமந்தாவின் பியூட்டி கிராப் #HBDSamantha
சென்னை மாடல் டூ ஆந்திரா மருமகள்...! சமந்தாவின் பியூட்டி கிராப் #HBDSamantha

சென்னை மாடல் டூ ஆந்திரா மருமகள்...! சமந்தாவின் பியூட்டி கிராப் #HBDSamantha

17 வருடங்களில் 25 படங்களில் ஹீரோயின், இன்னும் சில படங்களில் கெஸ்ட் ரோல், சில படங்களிலேயே முன்னணி நடிகை என்கிற இடம் என மிக சீரான வளர்ச்சி சமந்தாவினுடையது. ரசிகர்கள் மனம் கவர்ந்த, விஜய் 61 பட நாயகி சம்முவுக்கு இன்று பிறந்தநாள். குறுகிய காலத்துக்குள்ளேயே டாப் ஹீரோக்களுடைய படங்கள், பல விருதுகள் வென்றவர் பற்றி அதிகம் வெளியில் தெரியாத சீக்ரெட்ஸ் இதோ...

 • ஹோலி ஏஞ்சல்ஸில் ஸ்கூலிங், ஸ்டெல்லா மேரீஸில் காமர்ஸ் முடித்துவருக்கு மாடலிங் வாய்ப்பு வந்தது. தோழி ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டிதான் அதற்குக் காரணம். அந்த பார்ட்டியில் சமந்தாவின் புகைப்படங்களைப் பார்த்த ஒருவர் சமந்தாவை மாடலாக வைத்து விளம்பரம் எடுக்கலாம் என நினைக்க மாடலிங் வாய்ப்பு வந்திருக்கிறது. பாக்கெட் மணிக்குப் பணம் கிடைக்க ஆரம்பிக்க, மிக விரும்பி மாடலிங் செய்து கொண்டிருந்தார் சமந்தா. அப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்கும் போது ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் கண்ணில்பட்டார். ரவிவர்மன் இயக்கிய 'மாஸ்கோவின் காவிரி' மூலம் சினிமாத் துறைக்குள் நுழைந்தார். 
 • 2015ல் ஃபிலிம் ஃபேர் விருது விழாவில்  'மனம்' படத்துக்காக சிறந்த நடிகை விருதை வென்றார். அதே நிகழ்வில் ‘கத்தி’ படத்திற்காகவும் சிறந்த நடிகை விருதைப் பெற்றார் சமந்தா. இதற்கு முன் இப்படி, ஒரு ஃப்லிம்ஃபேர் விழாவில்  இரண்டு மொழிகளுக்காக இரண்டு  விருதுகள் வாங்கிய நடிகை ரேவதி. 
 • பெங்களூர் டேய்ஸ் படத்தில் நஸ்ரியாவின் ரோல் சமந்தாவுக்கு மிகவும் பிடித்தது. 'ச்சே... இந்த ரோல் நாம பண்ணியிருக்கணும்’ என சமந்தாவே சொல்லும் அளவுக்குப் பிடிக்குமாம். 
 • ”'கடல்’, 'ஐ’ படங்களில் நடிக்க முடியாமப்போச்சு. மிஸ் பண்ணிட்டோம்னு மனசுக்குள்ள ஃபீலிங்ஸ்தான்” என டாப் இயக்குநர்களின் படங்களை தவறவிட்டது பற்றி கூறுவார். 
 • ரோன்டா பைரன் எழுதிய சீக்ரெட் புத்தகம் சமந்தாவின் ஆல் டைம் ஃபேவரைட். 
 • சமந்தாவை சில நண்பர்கள் சாம் என அழைப்பார்கள். கூடவே யசோதா என்கிற செல்லப் பெயர் உண்டு. 
 • சினிமாவில் இவரின் தோஸ்து படா தோஸ்த்து காஜல் அகர்வால். பிருந்தாவனம் படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது ஏற்பட்ட பழக்கம் இப்போது வரை தொடர்கிறது. 
 • நடிகை கஜோல் சம்முவின் ஃபேவரைட். அவரைப்போல இருக்க வேண்டும் என்பது தான் ஆசையாம். நடிகை ரேவதியையும் பிடிக்கும். இவர்கள் தவிர பிரிட்டிஷ் நடிகை ஆட்ரி ஹெப்பர்னை தன் இன்ஸ்பிரேஷன் என சொல்வார் சமந்தா.
 • புதிதாக எதாவது கற்றுக் கொள்வது இவரின் ஹாபி. அப்படி இப்போது கற்றுக் கொண்டிருப்பது சிலம்பம்.
 • கடைத் திறப்பு விழா, விளம்பர வருமானங்கள் என வரும் பணம் முழுவதையும் தன் ‘பிரத்யுஷா டிரஸ்ட்’டுக்குக் கொடுத்துவிடுவது இவரின் வழக்கம். அந்த அமைப்பின் மூலம் உடனடி மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவி வருகிறார்.
 • சமந்தா என்றால் 'கடவுள் அவர்கள் கோரிக்கையைக் கேட்டார்' என அர்த்தம். இவருக்கு, டேவிட், பிரபு என இரண்டு அண்ணன்கள். தீவிர அசைவப்  பிரியர். தினமும் மீன் சாப்பிடப் பிடிக்குமாம்.  
 • சீக்கிரமே இவருக்கும் நடிகர் நாக சைத்தன்யாவுக்கும் திருமணம் ஆக இருக்கிறது. அதற்கும் சேர்த்து வாழ்த்துகள் சமந்தா என்கிற சாம் என்கிற யசோதா!
அடுத்த கட்டுரைக்கு