Published:Updated:

ராஜமௌலி பாகுபலி மூலம் சொன்ன பாடங்கள் இவைதான்! #TuesdayThoughts

பரிசல் கிருஷ்ணா
ராஜமௌலி பாகுபலி மூலம் சொன்ன பாடங்கள் இவைதான்! #TuesdayThoughts
ராஜமௌலி பாகுபலி மூலம் சொன்ன பாடங்கள் இவைதான்! #TuesdayThoughts

‘ஒரு படம் வந்தா போதுமே.. அதைப் பத்தியே எழுதிட்டிருக்க வேண்டியது’ அப்டினு யோசிக்காம, ஒரு விஷயம் நடந்துட்டிருக்கறப்ப அதை வெச்சு சொன்னாதான் மனசுல ‘பச்சக்’னு ஒட்டிக்கும்னு நம்பி மேல படிங்க! எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்துல பாகுபலி - 2 வந்து, பரபரன்னு ஓடிட்டிருக்கு. அதில இருந்து நாம எடுத்துக்க சில பாடங்கள் இருக்கு. அதையெல்லாம் பார்ப்போம்.


1.  பெரிய ப்ராஜக்ட்னா டைம் ஆகும் பாஸ்

நம்ம பாஸ் அல்லது மேனேஜர் ஒரு பெரிய ப்ராஜக்ட் எடுத்துட்டு வந்து, “Guys... ” அப்டினு ஆரம்பிச்சு ஒரு ஸ்பீச் குடுத்து, ‘ஒரு மாசம் டைம்’னு சொல்வாங்க. நமக்கும் “யோவ்.. இதுக்கு ஆறு மாசத்துக்கு மேல ஆகும்யா”னு சொல்ல வாய் துடிக்கும். அப்டியே யாராவது சொன்னாலும், “டீம் சைஸை அதிகப்படுத்தலாம். இன்னும் 4 பேர் அந்த டீம்ல இருந்து வருவாங்க”ம்பாரு. “யோவ்.. ஒரு பொண்ணு 9 மாசத்துல புள்ளை பெற முடியும். அதுக்காக 9 பொண்ணுக சேர்ந்து  ஒரே மாசத்துல புள்ளை கொடுக்க முடியுமாய்யா?”ன்னு கேட்கத் தோணும். கேட்க மாட்டோம். அவங்களுக்கெல்லாம் இந்தப் படம் ஒரு பாடம். 2011ல பேச்சு ஆரம்பிச்சு, 2013ல ஷூட் ஆரம்பிச்ச படம். இது கொஞ்சம் பெரிய லெவல்னு அவங்களுக்கு புரிஞ்சதுமே, 2 பாகமா ப்ளான் பண்ணி, 2015ல ஒரு பாகம், 2017ல ஒரு பாகம்னு பக்காவா முடிச்சு, குடுத்திருக்காங்க.

 2, கற்பனையை கண் முன்னால கொண்டு வாங்க!

சரித்திரப்படம்னாலே கற்பனைதான். எஸ்.எஸ்.ராஜமௌலி மனசுல உள்ள கற்பனையை மத்தவங்களுக்கு எப்டி சொல்றது? ரெண்டு விஷயம் பண்ணினார் ராஜமௌலி.

ஸ்டோரி போர்டு. கிட்டத்தட்ட 15000 டிராயிங் வரையப்பட்டது. இந்திய சினிமாவுல ஒரு படத்துக்கு இத்தனை ஸ்கெட்சஸ் வரைஞ்சது இதுக்குதான்னு சொல்றாங்க. 

ரெண்டாவது: டிஸ்கஷன். விவாதம். கதை விவாதம். வழக்கமா இயக்குநர், உதவி இயக்குநர்கள் மட்டும் இருக்கற விவாதங்கள் அல்ல. முழுக்கதையும் தயரான பின்னால, பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னானு படத்துல நடிக்கற எல்லாரையும் உட்கார வெச்சு கதை சொல்லல் நடந்தது. Script Reading Sessions அப்டினு சொல்றாங்க இதை. பாடலாசிரியர் உட்பட பலரும் இதுல கலந்துட்டு தினமும் கதையைக் கேட்டு உள்வாங்கிகிட்டாங்க. 
  
3. தலைமையை நம்புங்க!

எஸ்.எஸ்.ராஜமௌலிதான் கேப்டன். அவரை முழுமையா நம்பி, எல்லாரும் வேலை செஞ்சாங்க. ஒரு எதிர்கேள்வி இல்லை. இங்க பார்க்கணும், இப்படிப் பண்ணணும்னு அவர் என்ன சொன்னாரோ அதைச் செஞ்சாங்க. ”அவர் சொல்கிற ஒவ்வொரு விஷயத்திலும் ஏதேனும் ஒரு அர்த்தம் இருக்கும், அது எங்களுக்குத்தான் பெயர் வாங்கித் தரும் என்று நம்பி செயல்பட்டோம்.” இது படத்தில் பணிபுரிந்த டெக்னிஷியன்ஸ், நடிக, நடிகர்கள் பலரது பேட்டிகளில் வந்த வாசகம். அதன் பலன் ரிசல்டில் தெரிந்தது.


4. டீம் ப்ளேயரா இருங்க! 

பலரும் பலமுறை சொன்ன விஷயம்தான். குழுவா இருந்தா, வெற்றி நிச்சயம். ‘அவனுக்கு ஏன் முக்கியத்துவம், இவன் ஏன் இப்படி?’ மாதிரியான எந்தக் கேள்விகளும் இல்லாம ‘எனக்கு குடுத்தத நான் செய்யறேன்’ அப்டினு இருக்கறவங்கதான் டீம் ப்ளேயர். இந்தப் படத்தைப் பொறுத்தவரை எல்லாரும் இதைப் பின்பற்றி இருக்காங்கனு புரிஞ்சுக்க முடியும். பிரபாஸுக்கு அப்பா, மகன்னு 2 வேடம். ராணாவுக்கு ஒரே வேடம்தான். முதல் பாதில தமன்னாதான் அதிகம் வருவாங்க. இரண்டாம் பாதில அனுஷ்காதான் அதிகம். ஆனா யாருக்கும் யாரைப் பத்தின புகார், ஈகோ இருந்ததா தெரியலைங்கறது படத்துல தெரிஞ்சது. இதுதான் டீம் வொர்க்ல ரொம்ப முக்கியம்! 
  

படத்துல சின்ன டெக்னீஷியன்ல ஆரம்பிச்சு, டைரக்டர் வரைக்கும் எல்லாரும் காட்டின  அர்ப்பணிப்பு, பெர்ஃபெக்‌ஷன் அப்டினு பலதும் இருக்கு. ஆனா இந்த நாலும் முக்கியம். ரொம்ப ரொம்ப முக்கியம்!