Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என் ஊர்!

ஆறு குடும்பங்களுக்குச் சொந்தமான குபேரப்பட்டினம்!

வீன இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்கவரான தேவேந்திர பூபதி தன் சொந்த ஊரான குபேரப்பட்டினம் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

 ''பக்தி நகரமான பழநியின் வடகோடியில் உள்ள ஊர்தான் குபேரப்பட்டினம். கிராமம், நகரம்னு  பிரிக்க முடியாத நடுத்தரமான ஊர். பழமையான ஊரான பழநிக்குப் பக்கத்திலேயே பிற்காலத்தில் உருவான ஊர் இது. நான் பிறந்தப்ப வெறும் 100 குடும்பங்கள்தான் இருந்துச்சு. நாளடைவில் பல 100 குடும்பங்களாப் பெருகிருச்சு. குபேரப்பட்டினத்துல ஆனிமுத்து கம்பவுண்டர் லைன்லதான் எங்க வீடு இருந்தது. ஆனிமுத்து என் பெரியப்பா. கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டல்ல கம்பவுண்டரா இருந்தார். அதனாலயே எங்க லைனுக்கு இந்தப் பேர் வந்துச்சு. அன்னைக்கு ஆறு குடும்பங்களுக்கு மட்டுமே குபேரப்பட்டினம் சொந்தமா இருந்தது. ஒவ்வொருத்தங்களும் 40, 50 வீடுகளைக் கட்டி வீடு வாடகைக்கு விட்டிருந்தாங்க. நாங்களும் நாலஞ்சு வீடு கட்டி வாடகைக்கு விட்டிருந் தோம். பழநிக்கு யார் வந்தாலும் குபேரப்பட்டினத்துல வாடகைக்கு வீடு கிடைக்கும். எந்தக் கேள்வியும் கேட் காம வந்தாரை அரவணைச்ச ஊர் இது.

குபேரப்பட்டினத்துல கொடிகட்டிப் பறந்த தொழில்னா அது நெசவுத் தொழில்தான். நெசவுல பாவு கட்டுவாங்க. அதனால எங்கே பார்த்தாலும் 'டொக்கடி’, 'டொக்கடி’னு சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும். பாவு ஆத்துற வாசனை ஊர் முழுக்க எங்கே போனாலும் மூக்கைத் துளைக்கும்.

'அக்ரஹாரத்தில் உழவு மோயாது. சண்முக நதியில் எழவு மோயாது’(மாளாது)னு சொலவடையே சொல் வாங்க. அதுக்கேத்த மாதிரி ஆறு, துணை ஆறுகளை இழுத்துக்கிட்டு ஓடுற சண்முக நதியால் குபேரப் பட்டினத்துல முப்போகமும் விவசாயம் செழிச்சிருந்தது. பழநியில சிறுமலர் நடுநிலைப் பள்ளியில்தான்  நான் எட்டாவது வரை படிச்சேன். பத்தாவதுக்கு ஆயக்குடி உயர்நிலைப் பள்ளிக்கு மாறிட் டேன். பன்னிரண்டாம் வகுப்பு படிக்க பழநி நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு வந் துட்டேன். பட்டப்படிப்பு படிச்சது அருள் மிகு பழனியாண்டவர் கலைப் பண்பாட்டுக் கல்லூரியில். கலை அறிவியல் கல்லூரிதான் எல்லா இடங்களிலும் இருக்கும். ஆனால், தமிழகத்திலேயே கலைப் பண்பாட்டுக் கல்லூரி பழநியில்தான் இருக்கு. இந்தக் கல்லூரியில் 'இந்தியப் பண்பாடு’னு ஒரு பாடத் திட்டம் இருக்கு. இது வேற எந்தக் கல்லூரியிலும் இல்லாத சிறப்பு.

சித்திரை மாதம் கடைசி ஏழு நாட்களை யும் வைகாசி மாதம் முதல் ஏழு நாட்களை யும் பின்னேழு முன்னேழுனு சொல்வாங்க. இந்த 14 நாட்களும் பழநியில் கிரிவலம் நடக்கும். அன்னைக்கெல்லாம் பழநியில கூட்டம் அலைமோதும். எங்க வீட்டு மாடி யில் இருந்து பார்த்தா பழநி மலையே ஜெக ஜோதியாத் தெரியும். அப்ப குபேரபட்டினத்துல இருந்து கூட்டம் கூட்டமா கிளம்பி பழநி மலை மேல ஏறுவோம். அந்த மலைப் பாதை முழுக்க கடம்பம் பூ வாசனை அடிச்சுக்கிட்டே இருக்கும். படி ஏறின களைப்பு தெரியாம இருக்க, ஒவ் வொரு படியிலும் நின்னு வாசனை பிடிச்சுக் கிட்டே போவேன். மலை மேல ஏறினதும் மூச்சு வாங்க சீனி மிட்டாய், ஐஸ் மிட்டாயை ஆசை ஆசையா வாங்கிச் சாப்பிட்ட நாட்களை வாழ் நாள் முழுக்க மறக்கவே முடியாது. விழாக் காலங் களில் கொடுமுடி காவிரி ஆற்றங்கரையில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வருவோம். பழநி முருகனுக்குக் காவடி எடுத்து ஆடுவோம்.

கிரி துர்க்கை மலையடிவாரத்தில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ்னு சைவ சமயப் பாடல் களை விடுமுறை நாட்களில் சொல்லிக் கொடுப் பாங்க. இதை எல்லாம் கேட்டு தமிழ் இலக்கியங் கள் மீது எனக்கு ஈடுபாடு வந்துச்சு. இலக்கியங்கள் படிக்க ஆரம்பிச்சதுமே கவிதைகள் எழுத ஆரம் பிச்சிட்டேன். கல்லூரி படிக்கும்போது பூமணி மாறனுடன் இணைந்து 'தென்றல்’னு ஒரு இதழ் தொடங்கி நடத்தினோம். அப்ப எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைச்சது. ஒவ்வொரு அனுபவங் களும் என்னை வார்த்தெடுத்துச்சு.

குபேரப்பட்டினம் இப்போ கிட்டத்தட்ட பழநியோட ஒரு பகுதியா மாறிடுச்சு. எங்க ஊர்ல இருந்து நான் பார்த்து ரசித்த பழநிக்கும் இப்ப பரபரப்பா இயங்கிக்கிட்டு இருக்கிற பழநிக்கும் எத்தனையோ வித்தியாசங்கள். பக்தி நகரமா இருந்த பழநி இப்போ பண நகரமாமாறி ருச்சு. இப்போ தொட்டதெல்லாம் பணம்தான். அன்னைக்கு பழநி மலை முழுக்க மரங்கள் வளர்ந்து நிற்கும். மலைக்குப் பின்னால் ஒரு வனப் பகுதி இருக்கும். அதில் இருந்து வர்ற ஈரப் பதம் மிகுந்த காற்று குபேரப்பட்டினம் வரைக்கும் தொட்டுத் தாலாட்டும்.

ஆனால், இன்னைக்கு அந்த மரங்களை எல்லாம் வெட்டிட்டாங்க. எல்லாமே பெரிய கட்டடங்களா மாறிடுச்சு. என்னதான்பொருளா தாரரீதியில் பழநி முன்னேறி இருந்தாலும் எனக்குப் பழைய பழநியும் குபேரப்பட்டினமும் போல வராது. பழநி மலைமேல ஏறி கடம்பம் பூ மரங்களைப் பார்த்தா ஒண்ணுகூட இல்லை. அன்றைக்குக் கிடைச்ச கடம்பம் பூ வாசனை திரும்பக் கிடைக்குமானு ஏங்கிட்டு இருக்கேன்!''

-கி.ச.திலீபன்
படங்கள்: வீ.சிவக்குமார், என்.ஜி.மணிகண்டன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
ஸ்மைல் ப்ளீஸ்!
லிட்டில் ஜீனியஸ்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement
[X] Close