கராத்தேக்காரன் வர்றான்..!

ஸ்டன்ட் சிவா... சென்னை டூ மும்பை சினிமாக்களின் பரபர ஸ்டண்ட் இயக்குநர்! கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல ஹீரோக்களுக்கு அனல் பறக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் அமைத்துக்கொடுத்த சிவா, சில ஆண்டுகளுக்கு முன்பு ‘கராத்தேக்காரன்’ என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருந்தார். தற்போது அந்தப் படத்துக்கான வேலைகள் ஒருபுறம் ஆரம்பிக்க, படத்தின் ஹீரோக்களான அவரது மகன்களும் கராத்தே போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து வர, இதுதான் சரியான டைமிங் என இருவரையும் பிடித்து ஜாலியாய் சில கேள்விகள் கேட்டேன்.

‘`என் பேர் கெவின். ப்ளஸ்-டூ படிச்சுட்டு இருக்கேன். ‘கராத்தேக்காரன்’ படத்தில் மெயின் ரோல் பண்றேன். இது என் தம்பி ஸ்டீவன். ப்ளஸ் ஒன் படிக்கிறான். அதே படத்தில் செகண்ட் லீட் ரோல் பண்றான்’’ என இருவருக்கும் சேர்த்து அண்ணன் கெவினே பேச ஆரம்பித்தார்.

‘`உங்களுக்கு கராத்தே சொல்லிக்கொடுத்தது அப்பாவா... அம்மாவா?’’

‘`இரண்டு பேருமே கிடையாது. எங்க அம்மா லானி ‘வோவினாம்’ எனும் வியட்நாம் நாட்டை சேர்ந்த தற்காப்பு கலையைத்தான் எங்களுக்குச் சொல்லிக்கொடுத்தாங்க. அதில் அவங்க செம கில்லி. ரொம்பச் சின்ன வயசுல இருந்தே வோவினாம்தான் நாங்க கத்துக்கிட்டு வந்தோம். வோவினாம் டோர்ணமென்ட்டுகள் ரொம்பவே உக்கிரமா இருக்கும். பலமா தாக்கினா, ரத்தம் வந்தால்தான் அங்கே பாயின்ட்ஸ். எங்களுக்கு அதை சொல்லிக்கொடுத்த அம்மாவே டோர்ணமென்ட்டுக்கு எங்களை அனுப்ப பயந்தாங்கன்னா பார்த்துக்கோங்க. அப்புறம்தான் கராத்தே பற்றி அம்மாவுக்கு பல விஷயங்கள் தெரியவந்துருக்கு. கராத்தே போட்டிகள் வோவினாம் போட்டிகள் அளவுக்கு வன்முறையானது கிடையாது. 2020 ஒலிம்பிக்கில் கராத்தே இடம் பெறப்போகுதுன்னு எங்க அம்மா தெரிஞ்சுகிட்ட கொஞ்ச நாளிலேயே எங்களுக்குக் கராத்தே பயிற்சி ஸ்டார்ட் ஆகிடுச்சு. எங்க கராத்தே மாஸ்டர் பெயர் அல்டாஃப் ஆலம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick